ஓ.பி.எஸ் இளையமகன் போட்டியிடப்போகும் தொகுதி... வெற்றிபெற வைக்குமா சாதி சனம்..?

By Thiraviaraj RMFirst Published Feb 19, 2021, 1:02 PM IST
Highlights

சாதி, கட்சி ரீதியாகவும் வாய்ப்புகள் அதிகம் உள்ள தொகுதி. ஆனால் சிட்டிங் எம்.எல்.ஏ.வாக உள்ள ஜக்கையன், எளிதில் விட்டுத்தருவாரா? என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.
 

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும், அ.தி.மு.க., கூட்டணி தோற்றது. ஆனால், தேனியில் மட்டும் ஓ.பன்னீர்செல்வத்தின் மூத்த மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் ஓ.பி.எஸின் இளைய மகன் ஜெயபிரதீப்பை சட்டசபை தேர்தலில் களம் இறக்க ஓ.பி.எஸ் எடுத்த முயற்சிக்கு எடப்பாடி பழனிசாமியும் சம்மதித்துள்ளதாக தெரிகிறது. தி.மு.க.,வை போல, அ.தி.மு.க.,வும் வாரிசு அரசியல் வலையில் சிக்கி விட்டதா என்று கேட்டால், ஒரு மகனை டில்லிக்கும், இன்னொருவரை சென்னைக்கும் அனுப்பி, மக்கள் சேவை புரிய துணை முதல்வர் விரும்புவதாக ஆதரவாளர்கள் ஆறுதல் கூறுகின்றனர். 

அண்ணன் தேனி என்றால், தம்பி விலகி நிற்க முடியுமா? பக்கத்தில் உள்ள கம்பத்தில் களமிறக்கப்படுகிறார் ஜெய பிரதீப். அந்தத் தொகுதியில் ஓ.பிஎஸின் உறவினர்களும், அவரது சமுதாயத்தினரும் அதிகம். சாதி, கட்சி ரீதியாகவும் வாய்ப்புகள் அதிகம் உள்ள தொகுதி. ஆனால் சிட்டிங் எம்.எல்.ஏ.வாக உள்ள ஜக்கையன், எளிதில் விட்டுத்தருவாரா? என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.

click me!