பள்ளிக்கூடதிற்குள் நுழைந்து மாணவர்களுக்கு சாப்பாடு பரிமாறிய எம்எல்ஏ.. பழங்களை கொடுத்து மகிழ்ந்த அன்சாரி.

Published : Feb 19, 2021, 01:02 PM IST
பள்ளிக்கூடதிற்குள் நுழைந்து மாணவர்களுக்கு சாப்பாடு பரிமாறிய எம்எல்ஏ.. பழங்களை கொடுத்து மகிழ்ந்த அன்சாரி.

சுருக்கம்

பிறகு சத்துணவு கூடத்திற்கு சென்று சுகாதாரம், சமையல் சுத்தம் ஆகியன குறித்து ஆய்வு செய்த அவர், பிறகு சத்துணவு சாப்பிடும் மாணவர்களுடன் அமர்ந்து அவர்களுக்கு உணவு பரிமாறினார்.  

நாகூரில் உள்ள தேசிய மேல்நிலைப் பள்ளிக் கூடத்திற்கு நாகை சட்டமன்ற உறுப்பினர்  மு.தமிமுன் அன்சாரி அவர்கள் தீடீரென வருகை தந்து கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் வகுப்புகளை பார்வையிட்டார்.பின்னர் தலைமையாசிரியர், ஆசிரியர், ஆசிரியைகளை சந்தித்த அவர், வகுப்புகள் நடைபெறும் முறைமைகள் குறித்துக் கேட்டறிந்தார். 

9, 10, 11, 12 வகுப்புகளை சேர்ந்த மாணவ-மாணவிகளை வகுப்புகளுக்கு சென்று நலம் விசாரித்து பாடமுறைகள், வகுப்புகள் நடைபெறும் விதம் குறித்து விசாரித்தார். பிறகு 8 ஆம் வகுப்புகளுக்கு கீழ் பயிலும் மாணவ, மாணவிகள் வகுப்புக்கு வர இயலாத நிலையில், அவர்களுக்கு சத்துணவுக்கு பதிலாக வழங்கப்படும் அரிசி, பருப்பு, முட்டைகளை அங்கு வருகை தந்த பிள்ளைகளுக்கு வழங்கினார். 

பிறகு சத்துணவு கூடத்திற்கு சென்று சுகாதாரம், சமையல் சுத்தம் ஆகியன குறித்து ஆய்வு செய்த அவர், பிறகு சத்துணவு சாப்பிடும் மாணவர்களுடன் அமர்ந்து அவர்களுக்கு உணவு பரிமாறினார். தான் கொண்டு வந்த பழங்களையும் கொடுத்து அனைவரையும் பகிர்ந்து சாப்பிட கூறினார். MLA அவர்களின் வருகை தங்களுக்கு உற்சாகம் அளித்ததாக ஆசிரியர்களும், மாணவர்களும் கூறினர்.
 

PREV
click me!

Recommended Stories

களத்திற்கே வராத விஜய் களத்தை பற்றி பேசலாமா? இடைத்தேர்தல் நடக்கும்போது எங்க போனீங்க..? சீமான் கேள்வி
அல்லாஹவிடம் ஒப்படைக்கிறோம்..! ஹாதியின் மந்திரம் தொடர்ந்து எதிரொலிக்கும்..! உஸ்மான் இறுதிச் சடங்கில் யூனுஸ் சூளுரை..