ஷாப்பிங் மால்களின் சதி... மனிதர்கள் வாழ தகுதியற்ற இடமாக மாறுகிறதா சென்னை..? சாட்டை சுழற்றுவாரா மு.க.ஸ்டாலின்.!

By Thiraviaraj RMFirst Published Jun 30, 2021, 6:03 PM IST
Highlights

சென்னை நிலைகுலைய வேண்டுமா, அதன் இயக்கம் ஸ்தம்பிக்க வேண்டுமா? அதை நடத்திக் காட்டிக் கொண்டிருக்கின்றன வானுயர வளர்ந்து நிற்கும் ஷாப்பிங் மால்கள். 

சென்னை நிலைகுலைய வேண்டுமா, அதன் இயக்கம் ஸ்தம்பிக்க வேண்டுமா? அதை நடத்திக் காட்டிக் கொண்டிருக்கின்றன வானுயர வளர்ந்து நிற்கும் ஷாப்பிங் மால்கள். 

சென்னையின் மற்றொரு முகமாக மாறி வருகின்றன வணிக வளாகங்கள். 8 மாடிகள், 10 ஏக்கர் பரப்பளவு 1.068 மில்லியன் சதுரடி, 700 கடைகள், ஒரு நாளுக்கு 22 ஆயிரம் வாடிக்கையாளர்கள் வந்து செல்லும் பரபரப்பான வணிக வளாகம் ஸ்பென்ஷர் பிளாஸா. சென்னையின் அடையாளங்களுள் ஒன்றாக மவுண்ட் ரோட்டில் நிமிர்ந்து நிற்கிறது. 

சென்னை, அமைந்தங்கரை பகுதியில் அம்பா ஸ்கைவாக் பார்க்கிங்கில் மட்டுமே 1000 கார்களும், 1000ல்லும் அதிகமான இரு சக்கர வாகனங்களை நிறுத்தமுடியும். அவ்வளவு பரந்த வளாகம் அது. சில்லர்றை வணிக கடைகள் மட்டும் இங்கு 31 லட்சத்து 5 ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது. 6 அடுக்கு மாடிகளில் 50 பெரிய கடைகளும், 7 திரைகள் கொண்ட மல்டிபிளக்ஸ் திரையரங்கு ஒன்றும், 3 தளங்கள் நிரம்ப விற்பனை கூடங்களும் அமைந்துள்ளன.

24, லட்சம் சதுர அடி பரப்பளவில் சென்னையின் மிகப்பெரிய ஷாப்பிங் மாலாக அறியப்படுகிறது வேளச்சேரியில் உள்ள ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி. இங்கு 30 அறைகளை கொண்ட போட்டிக் ஹோட்டல் ஒன்றும், ஒரு ஏம்பி தியேட்டரும், 300 விற்பனைகூடங்களும் அமைந்திருக்கின்றன. கிட்டத்தட்ட 263 சர்வீஸ் மற்றும் கடைகள் உள்ளன. சில்லறை விலைக்கடைகள் மட்டும் 10 லட்சம் சதுரடி. 4 மேல் தளங்கள் ஒரு தரை தளம், அதற்கும் கீழுள்ள தரைதளத்தில் வாகன நிறுத்தம் என பிரம்மாண்டம் கூட்டுகிறது ஃபீனிக்ஸ்

மைலாப்பூரில் உள்ள சென்னை சிட்டி செண்டரில் 50 கடைகள், 25 உணவகங்கள், 50 கார்களை ஒரே நேரத்தில் நிறுத்தும் இடவசதி, என 5 மாடிகளை கொண்டு மைலாப்பூரை அலங்கரிக்கிறது சென்னை சிட்டி செண்டர். இப்படி எக்ஸ்ப்ரஸ் அவென்யூ, ஃபோரோம் விஜயமால், அல்சா மால், இஸ்பஹானி சென்டர் என பல ஷாப்பிங் மால்கள் முளைத்தும் சென்னைக்கு மேலோட்டமாக அழகூட்டுகிறதே தவிர அடிமடியில் கைவைத்து ஆபத்துக்களை ஏற்படுத்தி வருவதாக கூறச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. 

பல்லாயிரக்கணக்கானோர் ஒவ்வொரு நாளும் வந்து செல்லும்  இந்த ஷாப்பிங் மால்கள் மாநகராட்சியின் விதிகளையோ, குடிநிர் வடிகால் வாரிய விதிகளையோ பின்பற்றவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த மால்கள் மழைநீர் சேமிப்பு தொட்டிகளை உருவாக்கவில்லை. அதேபோல் கழிப்பறை நீர்களை வடிகட்டாமல் நேரடியாக அருகில் உள்ள கூவம், அல்லது சாக்கடை கால்வாய்களில் கலக்க விடுகின்றன’’போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இவ்வளவு பெரிய ஷாப்பிங் மால்கள் எப்படி இந்த விதிமுறைகளை காற்றில் பறக்க விடுகின்றன எனக் கேள்வி எழுப்பினார் சென்னை பெருமாநகராட்சி அதிகாரிகள், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை கைக்குள் போட்டுக் ’கவனித்து’ கொள்வதால் இந்த விதிகளை மீறுவதாக கூறுகிறார்கள்.   

பல்லாயிரம் பேர் வந்து செல்லும் ஷாப்பிங் மால்கள் இந்த விதிமுறைகளை கடைபிடிக்காமல் விட்டால் சென்னையின் நிலைமை இன்னும் சில நாட்களில் மிக மோசமாகி விடும். மனிதர்கள் வாழ்வதற்கு தகுந்த இடமாக இருக்காது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீர் செய்தே ஆக வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். 

click me!