ஆட்சிக்காக காங்கிரஸ் யாரை வேண்டுமானாலும் தீர்த்து கட்டும்.. காந்திக்கே பாதுகாப்பு கொடுக்கல.. பொங்கிய பொன்.ஆர்

By Ezhilarasan BabuFirst Published Jan 7, 2022, 5:34 PM IST
Highlights

காங்கிரசின் இந்த செயலுக்கு காந்தி சிலைக்கு முன்பு அஞ்சலி செலுத்தி மவுன போராட்டம் நடத்துவதுதான் பொருத்தமாக இருக்கும் என்ற அவர், காங்கிரஸ் இந்த நாட்டிற்கு தேவை இல்லாத ஒரு கட்சி எனகூறி அப்போது அந்தக் காட்சியை கலைத்து விட வேண்டும் என காந்தியடிகள் கூறினார். 

காங்கிரஸ் ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் பிரதமரை மட்டுமல்ல அவர்கள் முதல்வரையும் தீர்த்து கட்டுவார்கள், அது பஞ்சாப் முதல்வராக இருக்கலாம், தமிழக முதல்வராக இருக்கலாம் என  பொன். ராதாகிருஷ்ணன் காட்டமாக தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி பஞ்சாப் பயணத்தின்போது பாதுகாப்பு குறைபாடு காரணமாக பயணத்தை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பினார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பலரும் பஞ்சாப் மாநில அரசுக்கு கடும் கண்டனத்தை பதிவுசெய்து வருகின்றனர். இந்நிலையில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசை கண்டித்து தமிழக பாஜக சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், வி.பி துரைசாமி, நடிகை குஷ்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய பொன். ராதாகிருஷ்ணன் பிரதமர் வரும்போது  முறையாக பாதுகாப்பு ஏற்பாடு செய்யாத காங்கிரஸ் அரசு பிரதமரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

காங்கிரசின் இந்த செயலுக்கு காந்தி சிலைக்கு முன்பு அஞ்சலி செலுத்தி மவுன போராட்டம் நடத்துவதுதான் பொருத்தமாக இருக்கும் என்ற அவர், காங்கிரஸ் இந்த நாட்டிற்கு தேவை இல்லாத ஒரு கட்சி எனகூறி அப்போது அந்தக் காட்சியை கலைத்து விட வேண்டும் என காந்தியடிகள் கூறினார்.  இனி இந்த கட்சியே தேவையில்லை என அவர் கூறினார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகுதான் காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்டார். அவருக்கும் அப்போது காங்கிரஸ் பாதுகாப்பு கொடுக்கவில்லை. தேசப்பிதாவிற்கே இந்த நிலை ஏற்பட்டது. காலிஸ்தான் தீவிரவாதிகளை ஊட்டி வளர்த்தவர் இந்திரா காந்தி அம்மையார் தான்.

பிரதமர் மோடியை அவமதித்துள்ள பஞ்சாப் சகோதரர்களுக்கு ஒன்று புரிந்து கொள்ள வேண்டும், பஞ்சாப்பை இரண்டாக பிரித்து ஒரு பகுதியை இந்தியாவுக்கும், இன்னோரு பாதியை பாகிஸ்தானுக்கும் கொடுத்தது காங்கிரஸ்தான். ராஜீவ் காந்தி யாரால் கொல்லப்பட்டார் என்பது இப்போது பெரிய கேள்வியாக உள்ளது. ராஜீவ் காந்தியுடன் ஒரு காங்கிரஸ் கட்சிக்காரர் சாகவில்லையே, ஆனால் அப்போது காங்கிரஸ் கட்சி யார் மீது குற்றம் சாட்டியது திமுக மீது குற்றம் சாட்டியது. ஆக காங்கிரஸ் ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் பிரதமரை மட்டுமல்ல முதல்வரையும் தீர்த்து கட்டுவார்கள். அது பஞ்சாப் முதல்வராக இருக்கலாம், தமிழக முதல்வராக இருக்கலாம் என அவர் பேசினார். 

click me!