ராமதாஸ்க்கு செக் வைத்த எடப்பாடியார்..முக்கிய நிர்வாகியை தட்டி தூக்கிய அதிமுக..தைலாபுரத்தில் சலசலப்பு

Published : Jan 07, 2022, 05:11 PM IST
ராமதாஸ்க்கு செக் வைத்த எடப்பாடியார்..முக்கிய நிர்வாகியை தட்டி தூக்கிய அதிமுக..தைலாபுரத்தில் சலசலப்பு

சுருக்கம்

பாமக மாநில துணைச்செயலாளரும் சிவகங்கை மாவட்டச் செயலாளருமான  திருஞானம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.பாமக கட்சியின் முக்கியமான நிர்வாகியாக பார்க்கபடும் அவர் அதிமுகவில் இணைந்திருப்பது அரசியல் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. முன்பாக அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறியது. சட்டசபை தேர்தல், மக்களவை தேர்தல்களை ஒன்றாக எதிர்கொண்ட அதிமுக பாமக கூட்டணி ஊரக உள்ளாட்சி தேர்தலில் முறிந்தது. இதற்கு காரணம் அதிமுக தலைமை சரியில்லை எனவும் அதிமுக நிர்வாகிகளை தலைமையால் சரியாக கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் பாமகவினரால் கூறப்பட்டது.

இதனிடையே ஊரக உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வியடைந்த பாமக, அதிமுக கூட்டணியோடு மீண்டும் இணையுமா என்ற கேள்வி நிலவி வந்தது. ஆனால் 2021-ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம், 2022-ஆம் ஆண்டை வரவேற்போம் என்ற பெயரில் பாமக நடத்திய பொதுக்கூட்டத்தில் தனி அணி அமைப்பது குறித்து பேசப்பட்டது. அதாவது அதிமுக, திமுகவுடன் கூட்டணி இல்லாமல் மூன்றாவது அணி அமைக்க வேண்டும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

மேலும் அக்கூட்டத்தில் பேசிய ராமதாஸ், பாமக தலைமையில் தனி அணி உருவாக்கப்படும். வன்னியர்கள் பலர் இருந்தும் நம்மால் முதல்வர் ஆக முடியவில்லை. இனி அதை நாம் சாத்தியமாக்க வேண்டும். இனி பாமகவுக்கு மட்டுமே தேர்தலில் வேலை செய்ய வேண்டும். 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பதே லட்சியம். இதற்காக நாம் உழைக்க வேண்டும். தமிழ்நாட்டை பாட்டாளி ஆள வேண்டும். அது கடினம்தான் என்றாலும் அதற்காக நாம் உழைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.இதனால் அதிமுகவுடன் மீண்டும் பாமக கூட்டணி வைக்குமா அல்லது இல்லை மொத்தமாக இந்த கூட்டணி முடிவிற்கு வந்துவிட்டதா என்ற பல சந்தேகங்களை  எழுப்பியது. இந்த நிலையில்தான், தைலாபுரத்திற்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் பாமக கட்சியின் முக்கியமான நிர்வாகி ஒருவர் அதிமுகவில் இணைந்து உள்ளார். அக்கட்சியின் மாநில துணை செயலாளரான திருஞானம் அதிமுகவில் இணைந்துள்ளார்.

சமீப நாட்களாக பாமக நிர்வாகிகள் பலர் திமுகவில் சேர்ந்து வந்தனர். உள்ளாட்சி தேர்தலுக்கு முன் தருமபுரி கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் சத்தியமூர்த்தி தலைமையில் பாமக- வை சேர்ந்த நிர்வாகிகள் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்நிலையில் பாமக - அதிமுக நட்பில் மேலும் பிளவை ஏற்படுத்தும் வகையில் பாமக மாநில துணை செயலாளரான திருஞானம் அதிமுகவில் இணைந்துள்ளார்.

பாமக வின் சிவங்கங்கை மாவட்டச் செயலாளருமான திருஞானம் அதிமுகவில் இணைந்திருப்பது தென்தமிழகத்தில் பாமகவுக்கு இது இன்னும் பின்னடைவாக அமையும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என்று பாமக பேசி வரும் நிலையில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகி அதிமுகவில் இணைந்துள்ளது கட்சி நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அதிமுக இணைஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிச்சாமியை பாமக மாநில துணைசெயலாளரும், சிவகங்கை மாவட்டச் செயலாளருமான திருஞானம்  நேரில் சந்தித்து, அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சியின்போது, சிவகங்கை மாவட்டக்கழக செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன், கழக செய்தித்தொடர்பாளர் மருது அழகுராஜ், மானாமதுரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!