அரசியல் படுகொலைகளை தினந்தோறும் அரங்கேற்றும் கம்யூனிஸ்ட்? கோரப்பிடியில் அப்பாவிகள்.. கொதிக்கும் பாஜக.!

By vinoth kumarFirst Published Feb 25, 2022, 6:14 AM IST
Highlights

மேற்குவங்காளத்தில் படுகொலைகள் பல செய்து அரசியல் அதிகாரத்தை நிலைநாட்டினோமோ அதே போல் கேரளாவிலும் படுகொலைகள் பல செய்து, அரசியல் எதிரிகளை ஒழித்து அதிகாரத்தை நிலைநாட்ட வேண்டும்" என்று 2008ம் ஆண்டு பினராயி விஜயன் அவர்கள் கூறியதாக அன்றைய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி அப்துல்லா குட்டி அவர்கள் கூறியதை, கேரளாவில் நடைபெறுகிற கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியில் தொடர்ந்து நடைபெறும் பல நூற்றுக்கணக்கான படுகொலைகள்.

கேரளாவில் நடைபெறுகிற கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியில் தொடர்ந்து நடைபெறும் பல நூற்றுக்கணக்கான படுகொலைகள் உறுதிப்படுத்துவதோடு, பட்டியலினத்தை சார்ந்த அப்பாவிகள் பலர் கம்யூனிஸ்ட் கட்சியினரின் கோரப்பிடியில் சிக்கி உயிரிழப்பது அதிகரித்து வருகிறது என  நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

இதுதொடர்பாக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- அரசியல் படுகொலைகளை கேரளாவில் தினந்தோறும் அரங்கேற்றிக்கொண்டிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீண்டும் ஒரு படு கொலையை கொடூரமாக செய்திருக்கின்றனர்.

எர்ணாகுளம் மாவட்டத்தில் கீழக்கம்பளம் என்ற கிராமத்தில் கிட்டெக்ஸ் கார்மென்ட்ஸ் என்ற தனியார் நிறுவனம் உள்ளது. கீழக்கம்பளம் கிராமத்தில் ட்வென்டி 20 என்ற பெயரில் சில ஆண்டுகளுக்கு முன் தன்னார்வ தொண்டு நிறுவனம் தொடங்கப்பட்டது.கீழக்கம்பளம் கிராமத்தில் பல்வேறு மக்கள் நலப்பணிகளை ட்வென்டி 20 அமைப்பினர் மேற்கொண்டது. 2015 ஆம் ஆண்டு கேரள உள்ளாட்சித் தேர்தலில் ட்வென்டி 20 அமைப்பு கீழக்கம்பளம் பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றது. பஞ்சாயத்துகளில் முன்மாதிரி கிராமமாக விளங்கியது கீழக்கம்பளம்.கார்ப்பரேட் நிறுவனம், பஞ்சாயத்து நிர்வாகத்தை நடத்துவதா என்று அப்போதிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

சமீபத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் நெருக்கடியினால் இந்த நிறுவனம் கேரளாவை விட்டு, தெலுங்கானா மாநிலத்தில் பெரும் முதலீட்டை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கீழக்கம்பளம் கிராமத்தில் தங்களின் சொந்த நிதியில் தெரு விளக்குகளை நிறுவ முயற்சித்ததற்கு, கம்யூனிஸ்ட் கட்சியினர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த எதிர்ப்பை கண்டித்து கீழக்கம்பளம் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் விளக்கை அணைத்து வைக்குமாறு ட்வென்டி 20 அமைப்பு அழைப்பு விடுத்ததையடுத்து, அதற்கு ஆதரவு திரட்டிய பட்டியலினத்தை சேர்ந்த 'தீபு' என்ற 38 வயது நபர் கோரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

பல்வேறு போராட்டங்களுக்கு பின் இந்த படுகொலைக்கு காரணமான ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியை சேர்ந்த பி. ஏ ஜைனுதீன், என்.ஏ பஷீர், அப்துல் ரகுமான் மற்றும் அஸீஸ் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த படுகொலையின் பின்னணியில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் குன்னத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநிஜின் உள்ளார் என்று ட்வென்டி 20 அமைப்பின் அமைப்பாளரும், கிட்டெக்ஸ் நிறுவனத்தின் தலைவருமான  சாபு எம் ஜேக்கப் குற்றம் சாட்டியுள்ளார். 

"எப்படி மேற்குவங்காளத்தில் படுகொலைகள் பல செய்து அரசியல் அதிகாரத்தை நிலைநாட்டினோமோ அதே போல் கேரளாவிலும் படுகொலைகள் பல செய்து, அரசியல் எதிரிகளை ஒழித்து அதிகாரத்தை நிலைநாட்ட வேண்டும்" என்று 2008ம் ஆண்டு பினராயி விஜயன் அவர்கள் கூறியதாக அன்றைய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி அப்துல்லா குட்டி அவர்கள் கூறியதை, கேரளாவில் நடைபெறுகிற கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியில் தொடர்ந்து நடைபெறும் பல நூற்றுக்கணக்கான படுகொலைகள் உறுதிப்படுத்துவதோடு, பட்டியலினத்தை சார்ந்த அப்பாவிகள் பலர்  கம்யூனிஸ்ட் கட்சியினரின் கோரப்பிடியில் சிக்கி உயிரிழப்பது அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. 

click me!