ஆர்.என்.ரவிக்கு எதிராக ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவோம்..! ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள்- முத்தரசன் அதிரடி

By Ajmal Khan  |  First Published Nov 17, 2022, 10:21 AM IST

அரசியல் சட்டமைப்புக்கு உட்பட்டு செயல்படாமல் அரசியல் கட்சி தலைவரைப் போல செயல்படும் ஆர்.என்.ரவியை கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 


ஆளுநர்-தமிழக அரசு மோதல்

தமிழக ஆளுநராக செயல்படும் ஆர்.என்.ரவிக்கும்,  தமிழக அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதாவை கிடப்பில் போட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டப்பட்டது. மேலும் அரசு நிகழ்வுகளில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை ஆளுநர் வெளிப்படுத்துவதாக அமைச்சர்களே புகார் தெரிவித்திருந்தனர். இதே போல திருக்குறளில் ஆன்மிக கருத்துகள் மறைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து நாடுகளும் ஏதோ ஒரு மதத்தை பின்பற்றுவதாவும் தெரிவித்திருந்தார். இது போன்ற கருத்துகள் திமுக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகளை அதிருப்தி அடையவைத்து. மேலும் கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழக அரசு காலம் தாழ்த்தி என்ஐஏக்கு வழக்கை மாற்றியதாகவும் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியிருந்தார்.

Tap to resize

Latest Videos

ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகள்

இந்தநிலையில் திமுக கூட்டணி கட்சி எம்பிக்கள் சார்பாக ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி குடியரசு தலைவரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் ராணிப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது. தமிழ்நாட்டில் ஆளுநராக பொறுப்பேற்று செயல்பட்டு வரும் ஆர்.என் ரவி, தனதுபொறுப்பில் இருந்து செயல்படாமல் அரசியல் கட்சி தலைவரைப் போல பகிரங்கமாக செயல்பட்டு போட்டி அரசாங்கத்தை நடத்தி வருவதாக குற்றம்சாட்டினார். மேலும் மதச் சார்பின்மைக்கு நேர்மாறாக செயல்படுவதாகவும்  முத்தரசன் விமர்சித்தார்.

பொதுமக்களுக்கு குட் நியூஸ்..! மெட்ரோ ரயில், பஸ், மின்சார ரயில் பயணிக்க ஒரே டிக்கெட்.! மு.க.ஸ்டாலின் ஆலோசனை

முற்றுகை போராட்டம்- இந்திய கம்யூனிஸ்ட்

மேலும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மக்கள் நலனுக்காக தான் நிறைவேற்றப்படுகிறது. அவ்வாறு நிறைவேற்றப்பட்ட 20க்கும் மேற்பட்ட மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் கிடப்பில் உள்ளதாகவும் அந்த மசோதா மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்துவதாக புகார் தெரிவித்து இருந்தார்.  எனவே ஆளுநரின் செயல்பாட்டை கண்டிக்கும் வகையில் டிசம்பர் 29 ஆம் தேதி சென்னையில் ராஜ்பவனை முற்றுகையிடும் போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்தார். இந்த போராட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக கூறினார். இந்த போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா தலைமை ஏற்க இருப்பதாக தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

தீவிரமாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி..! தமிழகத்திற்கு மீண்டும் கன மழை எச்சரிக்கை.! வானிலை மையம் தகவல்

click me!