ரிப்பன் பில்டிங்க் மூழ்க காரணமானவரை தூக்கியடித்த கமிஷனர்... அடம்பிடிக்கும் அதிகாரி..!

Published : Nov 11, 2021, 06:25 PM ISTUpdated : Nov 18, 2021, 01:02 PM IST
ரிப்பன் பில்டிங்க் மூழ்க காரணமானவரை தூக்கியடித்த கமிஷனர்... அடம்பிடிக்கும் அதிகாரி..!

சுருக்கம்

பணிகளை மேற்கொள்ளாமல் காண்ட்ராக்ட், கரப்சன் என கவனம் செலுத்தியதே ரிப்பன் பில்டிங் மூழ்க காரணம் எனத் தெரிய வந்துள்ளது. 

’’ஹலோ... போட் சர்வீஸா?? எங்க ஆபீஸ் ஃபுல்லா தண்ணீக்குள்ள நிக்கிது. 
இரண்டு படகு அனுப்பி வைக்க முடியுமா!!??

கார்ப்பரேஷன் ஆபீஸ் க்கு போன் பண்ணுங்க சார்!!

க்ரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் ஆபீஸ் ரிப்பன் பில்டிங்லேந்து தான்யா  கால் பண்றோம்!!??’’ என்றும்

’’சென்னைய சிங்கப்பூராக மாத்திரேனு சொல்லிட்டு வெனிஸ் நகரமா மாதிட்டானுங்க...’’ என்றும் சென்னை பெருமாநகராட்சி அலுவலகமான ரிப்பன் பில்டிங்கில் தண்ணீர் சூழ்ந்ததை கேலி செய்து வருகிறார்கள் மக்கள். 
தீவைப்போல காட்சிதரும் ரிப்பன் மாளிகை. 

இதனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுப்பாகி போக யார் இந்த அவலத்திற்கு காரணம் என விசாரணை நடத்தச் சொல்லி உத்தரவிட்டு இருக்கிறார். சென்னை மாநகராட்சி கமிஷனர் ககந்தீப் சிங் ஆய்வு மேற்கொண்டதில் பொறியாளரான முருகன் EE என்வர் தான் இதற்கு காரணம். பணிகளை மேற்கொள்ளாமல் காண்ட்ராக்ட், கரப்சன் என கவனம் செலுத்தியதே ரிப்பன் பில்டிங் மூழ்க காரணம் எனத் தெரிய வந்துள்ளது. 

அவரது விசாரணையில் இன்னும் முருகனை பற்றிய அதிர்ச்சி தகவல்களும் ககன் தீப் சிங் பேடி கவனத்துக்கு வந்துள்ளது. இந்த முருகன் 28 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றி வருகிறார். பல நூறு கோடிகளுக்கு அதிபதியாக இருக்கிறார் என்று தெரியவர, மண்டலம் 5 பேஷின் ப்ரிட்ஜ்க்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டிருக்கிறார் ககந்தீப் சிங் பேடி. ஆனால், அவரையே மிரட்டும் தொனியில் அதெல்லாம் மாறுதலில் செல்ல முடியாது. இங்குதான் இருப்பேன். முடிந்ததை செய்து பாருங்கள் என அங்கேயே பிடிவாதமாக இருக்கிறாராம். 

இவர் குறித்து சென்னை மாநகராட்சி ஊழியர்கள் கூறும்போது, ’’ இவர் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் தூரத்து சொந்தம் என்பதால் பணம் கட்டுக்கட்டாக கொட்டும் டவுன் ப்ளானிங் துறையில் 5 வடுடமாக இருந்து வருகிறார். இவரை சென்னையில் பில்டர்கள் 80 ரூபாய் ஸ்கியர்பிட் ரேட் முருகன் என்றே அழைக்கிறார்கள். பல கோடி சொத்துக்களை குவித்துள்ள முருகன் திமுக ஆட்சிக்கு வந்தும் அதே டவுன் ப்ளானிங் துறையில் இருந்து மாற்றப்படாமல் இருந்தார். இந்த பருவமழை முருகனை யார் என்று காட்டிக்கொடுத்து விட்டது. 

கமிஷனர், முருகனின் கோல்மால்களை கண்டுபிடித்து விட்டார். இடமாற்றமும் செய்து விட்டார். ஆனால், தனது செல்வாக்கை பயன்படுத்தி நான் இங்குதான் இருப்பேன் முருகன் பிடிவாதம் செய்து வருகிறார். ஆனால், அவர் இனி எந்த அஸ்திரத்தை எடுத்தாலும் தப்பிக்க முடியாது’’ என்கிறார்கள் மாநகராட்சி ஊழியர்கள்.  

PREV
click me!

Recommended Stories

மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி ஊழல்..! சட்டப்படி நடவடிக்கை எடுக்காத திமுக அரசு..! களத்தில் இறங்கிய அதிமுக..!
திருவனந்தபுரத்துக்கு நன்றி.. கேரள அரசியலில் பெரும் திருப்புமுனை.. பிரதமர் மோடி பெருமிதம்!