சும்மாவே தாக்குவோம்...! இப்ப சொல்லவா வேணும்...! எடப்பாடியை ரவுண்டு கட்டும் டிடிவி தரப்பு..!

First Published Jan 30, 2018, 12:49 PM IST
Highlights
The chief minister spoke of the truth is denounced by DTV supporter Gold Thamilselvan.


தேடப்படும் குற்றவாளி அன்புச்செழியனுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாக வெளியான தகவல் அதிர்ச்சி தருகிறது எனவும் அன்புச்செழியனுடன் முதலமைச்சர் பேசியது உண்மை என்றால் கண்டிக்கத்தக்கது எனவும் டிடிவி ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். 

சினிமா இணை தயாரிப்பாளரும், நடிகர் சசிகுமாரின் உறனிருமான அசோக்குமார், கந்துவட்டி பிரச்சனை காரணமாக சென்னை, வளசரவாக்கத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, அன்புச்செழியன் தலைமறைவானார். அவர் மீது நடிகர் சசிகுமார் உள்ளிட்ட பலர் புகார் கொடுத்துள்ளனர். 

இந்த நிலையில், தலைமறைவான அன்புச்செழியனைப் பிடிக்க, போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். ஆனால் அன்புச்செழியன் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. 

இதனிடையே அசோக்குமார் தற்கொலை வழக்கு தொடர்பாக தேடப்படும் அன்புசெழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பைனான்சியர் அன்புச்செழியனின் முன் ஜாமின் மனு மீதான வழக்கை கிருஸ்துமஸ் பண்டிகைக்கு பின் விசாரிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜு இல்ல காதணி விழாவில் எடப்பாடி, ஓ.பி.எஸ். பங்கேற்றனர். அப்போது அன்புசெழியனுடன் விழாவில் முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் பேசியதாக கூறப்படுகிறது. 

இதைதொடர்ந்து தேடப்படும் குற்றவாளி அன்புச்செழியனுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாக வெளியான தகவல் அதிர்ச்சி தருகிறது எனவும் அன்புச்செழியனுடன் முதலமைச்சர் பேசியது உண்மை என்றால் கண்டிக்கத்தக்கது எனவும் டிடிவி ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். 
 

click me!