காவிரி வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும்: மோடியிடம் எடப்பாடி மனு!

 
Published : Apr 12, 2018, 04:13 PM ISTUpdated : Sep 19, 2018, 02:14 AM IST
காவிரி வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும்: மோடியிடம் எடப்பாடி மனு!

சுருக்கம்

The Cauvery Board should be set up immediately! CM Edappadi Palanasamy pleads for Modi

உச்சநீதிமன்ற ஆணைப்படி காவிரி மேண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தி போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சிக்காக பிரதமர் மோடி வருகை தந்தார். அப்போது ராணுவ தளவாட கண்காட்சியை அவர் முறைப்படி தொடங்கி வைத்தார்.

பிரதமர் மோடியின் வருகைக்கு திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கருப்பு கொடி காட்டியும், கருப்பு பேட்ஜ் அணிந்து, கருப்பு பலூன்கள் பறக்கவிட்டும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ராணுவ தளவாட கண்காட்சிக்குப் பிறகு, அடையாறு கேன்சர் மருத்துவனைக்கு பிரதமர் மோடி சென்றார். கேன்சர் மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட பின்னர் அவர், டெல்லி புறப்பட்டார்.

மோடி, டெல்லி புறப்படுவதற்கு முன்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரிடம் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், உச்சநீதிமன்ற ஆணைப்படி காவிரி மேலாண் வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தமிழக டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரி நீரை மட்டுமே நம்பி உள்ளனர் என்றும் அதிகாரமிக்க காவிரி வாரியம், ஒழுங்காற்று குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அந்த மனுவில் கூறியுள்ளார்.

அடுத்த பருவகால பாசனம் வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. எனவே வாரியத்தை அமைக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்ட மனுவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
விஜய் கை ஓங்கிவிடக்கூடாது..! வேகத்தைக் கூட்டும் பாஜக..! அண்ணாமலைக்கு முக்கியப் பொறுப்பு..!