#BREAKING அதிமுக அவைத் தலைவர் நியமனம் தொடர்பான வழக்கு.. ஓபிஎஸ், இபிஎஸ்க்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

By vinoth kumarFirst Published Nov 10, 2021, 6:17 PM IST
Highlights

கடந்த 2016ம் ஆண்டு அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அதன் பிறகு நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பிறகு சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்ற பின்னர் அதிமுக அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது.

அதிமுகவுக்கு புதிய அவைத் தலைவர் நியமிப்பது தொடர்பாக 10 நாட்களுக்குள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க வேண்டும் என சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2016ம் ஆண்டு அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அதன் பிறகு நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பிறகு சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்ற பின்னர் அதிமுக அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது, பொதுச்செயலாளர் என்ற பதவி நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டது. 

தற்போது, அதிமுகவின் அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் உடல்நலக்குறைவால் கடந்த ஆகஸ்ட் மாதம் உயிரிழந்தார். இதையடுத்து புதிய அவைத்தலைவரை நியமிக்கும் பணியில் அதிமுக தலைமை ஈடுபட்டுள்ளது. புதிய அவைத் தலைவரை நியமிப்பது குறித்து கட்சியின் மூத்த தலைவர்களுடன் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து ஆலோசனை மேற்கொண்டனர். 

இந்நிலையில், புதிய அவைத்தலைவர் தேர்வு செய்ய தடை விதிக்க வேண்டும் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த அதிமுக உறுப்பினர் சூரியமூர்த்தி ஒரு வழக்கை தொடர்ந்தார். அதில், உட்கட்சி தேர்தல் நடத்தி தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் மூலமாக மட்டுமே அவைத் தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும். தற்போதைய சூழலில் சட்டத்திற்கு புறம்பாக பொதுக்குழுவின் மூலமோ அல்லது அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பரிந்துரை மூலமாகவும் அவைத்தலைவர் நியமனத்தை செய்யக்கூடாது கட்சி விதிகளுக்கு எதிரானது எனவே தடை விதிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். 

இந்த வழக்கு நீதிபதி தாமோதரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது அதிமுகவுக்கு புதிய அவைத்தலைவர் நியமிக்க தடை கோரிய வழக்கில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரும் 10 நாள்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு நவம்பர் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

click me!