கொடூர வேட்டையாடும் கொரோனா... கோயம்பேடு மார்க்கெட் சங்க தலைவர் பலி..!

By Thiraviaraj RMFirst Published Jul 2, 2020, 1:18 PM IST
Highlights

கொரோனா தொற்றுக்கு கோயம்பேடு மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தங்கம் செல்வராஜ் பலியானார். 

கொரோனா தொற்றுக்கு கோயம்பேடு மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தங்கம் செல்வராஜ் பலியானார். 

 இந்தியாவில் தப்லிக் ஜமாத் மாநாடு மூலம் கொரோனா பரவிய நிலையில் தமிழகத்தில் கோயம்பேடு மார்கெட் கொரோனாவை பரப்பும் ஹாட்ஸ்பாட்டாக மாறியது. அங்கிருந்து மற்ற ஊர்களுக்கும் கொரோனா பரவ ஆரம்பித்தது. ஆசியாவின் மிகப்பெரிய மொத்த காய்கறி, பழ மற்றும் பூக்கள் விற்பனை நிலையமான கோயம்பேடு மார்க்கெட் 295 ஏக்கர் பரப்பளவில் காய்கறி, பழம் பூக்கள் விற்பனைக்கு 3200 கடைகளுடன் அமைந்துள்ளன. முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையிலும் கோயம்பேடு பகுதியில் சரியான நடவடிக்கை இல்லாததால் கோரோனா பரவ ஆரம்பித்தது. 

அரசு தீவிர ஊரடங்கை அறிவித்து தினமும் 50 பேருக்கு கொரோனா நோய் தொற்று நிலையில் இருந்த கோயம்பேடு மார்க்கெட் மூலம் தினமும் 1000 பேர் என்ற நிலை உருவானது. இதனால் திருமழிசைக்கு கோயம்பேடு மார்க்கெட் தற்காலிகமாக மாற்றப்பட்டது. இந்நிலையில் சென்னையில் கொரோனா பரவல் தாக்கம் அதிகரித்து வரும் வேளையில் கோயம்பேடு மார்கெட் சங்க தலைவர் செல்வராஜ் பலியாகி உள்ளார். 

தெட்சண மாற நாடார் சங்கத்தின் சென்னை சேர்மனும், கோயம்பேடு நாடார் சங்கத்தின் பொதுச்செயலாளருமான பாரதிய ஜனதா கட்சியிலும் தங்கம் R.செல்வராஜ் இருந்து வந்தார். இந்நிலையில் கோயம்பேடு மார்கெட் சங்கத்தலைவர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது வியாபாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

click me!