உடைகிறது அதிமுக... ராஜன் செல்லப்பா அதிர்ச்சி பேட்டி..!

By Thiraviaraj RMFirst Published Jun 8, 2019, 11:48 AM IST
Highlights

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தான் தேவை ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டவர் ஒருவரே தலைமை ஏற்க வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தான் தேவை ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டவர் ஒருவரே தலைமை ஏற்க வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  ’’9 எம்.எல்.ஏக்கள் ஆட்சியை காப்பாற்ற வேண்டும் என்கிற இக்கட்டான சூழலில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். ஆனால், ஜெயலலிதா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தவில்லை. தேனி என்.பி ரவீந்திரநாத் உட்பட 9 எம்.எல்.ஏக்களும் ஜெயலலிதா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தாது ஏன்? ஜெயலலிதாவால் அதிகம் அடையாளம், காட்டப்பட்டவர்தான் அதிமுகவில் தலைமை ஏற்க வேண்டும். ஆளுமை திறனுடன் இருக்க வேண்டிய பதவி இப்போது அதிகாரமிக்கதாக இல்லை. ஜெயலலிதாவின் ஆளுமை இப்போது யாருடனும் இல்லை. ஒற்றைத் தலைமையுடன் கட்சியை கட்டுப்பாட்டுடன் கொண்டு செல்ல வேண்டும்.

கட்சியில் எல்லோருக்கும் நெருடல் இருக்கிறது. நெருடலை தெரியப்படுத்தவே எல்லோரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.  சியநலமற்ற ஒருவரை கட்சி தலைமை தேர்ந்தெடுக்க வேண்டும். அதிமுகவுக்கு ஒரே தலைமை தேவை. ஒரே தலைமையை தேர்வு செய்ய பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்துவோம். நான் சொல்லும் கருத்துகள் கட்சிக்குள் இருக்கும் உட்பிரச்சினை அல்ல. இரண்டு தலைமை இருப்பதால் உடனுக்குடன் முடிவெடுக்க இயலவில்லை, 

அதிமுகவில் இப்போது யாருக்கு அதிகாரம் இருக்கிறது என்பது தெரியவில்லை. தினகரன் என்கிற மாயை இப்போது இல்லை என்பது நிரூபணமாகி விட்டது.’’ என அவர் தெரிவித்துள்ளார். அதிமுகவை ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்டெல்வமும், துணை ஒருங்கிணப்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் வழி நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளராக அறியப்படும் மதுரை எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா வெளிப்படையாக தெரிவித்துள்ளது அக்கட்சியில் உட்கட்சி பிரச்னை வெடித்துள்ளதை உறுதிப்படுத்தி உள்ளது.  

click me!