
நடிகர் விஜயை வளைக்கும் எண்ணம் பாஜகவிற்கு இல்லை எனவும் விஜய் படம் மட்டுமல்ல, எந்தப் படத்தில் ஜிஎஸ்டி பற்றி கூறப்பட்டிருந்தாலும், பாஜக கருத்துக்களை முன்வைக்கும் எனவும் பாஜக மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாரிக்கப்பட்ட படம் மெர்சல். இப்படம் தடைகள் பலவற்றைக் கடந்து தீபாவளியன்று வெளியாகியது.
தற்போது பல்வேறு வசூல் சாதனைகளையும் இப்படம் படைத்து வருகிறது. இந்த படத்தில் ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற மத்திய அரசின் திட்டங்களை விமர்சிக்கும் காட்சிகளை நீக்க வேண்டும் என பாஜகவினர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
பாஜகவின் இத்தகைய கருத்திற்கு அரசியல், திரையுலகினர் என பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே நடிகர் விஜயை தங்கள் பக்கம் இழுக்க பாஜகவின் உள்நோக்கமாக கூட இருக்கலாம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், திருமாவளவனின் அனுபவம் பேசுகிறது என்றும் கட்டப்பஞ்சாயத்து செய்து இடத்தை பிடுங்குபவர் திருமாவளவன் எனவும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும் நடிகர் விஜயை வளைக்கும் எண்ணம் பாஜகவிற்கு இல்லை எனவும் விஜய் படம் மட்டுமல்ல, எந்தப் படத்தில் ஜிஎஸ்டி பற்றி கூறப்பட்டிருந்தாலும், பாஜக கருத்துக்களை முன்வைக்கும் எனவும் குறிப்பிட்டார்.