பாஜகவுக்கு பயப்படுகிறாரா ரஜினி...? - மெர்சல் ரசிகர்கள் கண்டனம்...!

Asianet News Tamil  
Published : Oct 22, 2017, 11:03 AM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
பாஜகவுக்கு பயப்படுகிறாரா ரஜினி...? - மெர்சல் ரசிகர்கள் கண்டனம்...!

சுருக்கம்

Rajini who did not comment on the Merseyside scandal has strongly condemned the websites.

மெர்சல் படப்பிரச்சனையில் கருத்து தெரிவிக்காத ரஜினிக்கு வலைத்தளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாரிக்கப்பட்ட படம் மெர்சல். இப்படம் தடைகள் பலவற்றைக் கடந்து தீபாவளியன்று வெளியாகியது. 

தற்போது பல்வேறு வசூல் சாதனைகளையும் இப்படம் படைத்து வருகிறது. இந்த படத்தில் ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற மத்திய அரசின் திட்டங்களை விமர்சிக்கும் காட்சிகளை நீக்க வேண்டும் என பாஜகவினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். 

பாஜகவின் இத்தகைய கருத்திற்கு அரசியல், திரையுலகினர் என பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மெர்சல் படப்பிரச்சனையில் கருத்து தெரிவிக்காத ரஜினிக்கு வலைத்தளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மெர்சல் படத்துக்கு தமிழ்த்திரையுலகம் ஆதரவு தெரிவித்துள்ளநிலையில், ரஜினி மட்டும் வாய் திறக்காதது குறித்து சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனம் எழுந்து வருகிறது. 

 பா.ஜ.க.வின் கோபத்துக்கு ஆளாகக்கூடும் என ரஜினிகாந்த் அஞ்சுவதாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

மாணவியைச் சிதைத்த காமக் கொடூரர்கள்: புகாரை மதிக்காத காவல்துறை... மு.க.ஸ்டாலினுக்கு இபிஎஸ் கடும் எச்சரிக்கை!
ஈராக் முதல் பஹ்ரைன் வரை ரத்த வேட்டை: அமெரிக்காவை மண்டியிட வைக்கத் துடிக்கும் ஈரான்..! பதறும் டிரம்ப்..!