திண்டுக்கல்லுக்கு வரும் பிரதமர், முதல்வர்..! வரவேற்று வைக்கப்பட்ட கொடிகள்.. போலீசார் அகற்றியதால் பரபரப்பு

By Ajmal Khan  |  First Published Nov 10, 2022, 3:03 PM IST

திண்டுக்கல்லில் நாளை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ள நிலையில் ஹெலிபேட் அருகே வைக்கப்பட்ட கொடிகளை அகற்ற போலீசார் உத்தரவிட்டதால் திமுக மற்றும் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


தமிழகம் வரும் பிரதமர் மோடி

பெங்களூரில் நடைபெறும் `வந்தே பாரத்' ரயில் சேவை தொடக்க விழாவில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து விமானம் மூலம்  மதுரை விமான நிலையம் வருக்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகம் அருகே அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தில் இறங்குகிறார். இதனையடுத்து காந்திகிராம பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் மோடி  பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சயில் இசைஞானி இளையராஜாவுக்கு டாக்டர் பட்டத்தை மோடி வழங்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்கள்.

Tap to resize

Latest Videos

3000 போலீசார் குவிப்பு

திண்டுக்கல் பகுதிக்கு பிரதமர் மோடி வருவதையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த பகுதியை சுற்றி சுமார் 3000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புக்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பட்டமளிப்பு விழாவிற்கு வரும் பிரதமர் மற்றும் தமிழக முதல்வருக்கு திண்டுக்கல் முதல் மதுரை வரை பாதுகாப்பு வளையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் காந்திகிராம சாலை, மதுரை காந்தி கிராம சாலை ஆகிய இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளிலும் பாரதிய ஜனதா மற்றும் திமுகவினர் போட்டி போட்டு தங்களது கட்சியின் கொடி கம்பங்களை நட்டு வைத்துள்ளனர். 


கொடிகளை அகற்ற உத்தரவு

இதனிடையே சின்னாளப்பட்டி ஹெலிபேட் தளம் அருகே திமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் கட்டிய கொடிகளை அகற்ற போலீசார் உத்தரவிட்டனர். இதற்க்கு இரு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பாரதிய ஜனதா கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படியுங்கள்

சனாதான கூட்டம் நடைபெறும் இடமாக ஆளுநர் மாளிகை..! ஆர்.என்.ரவிக்கு எதிராக சுப. வீரபாண்டியன் போராட்டம்

click me!