எப்படியாவது மத வெறுப்பை உருவாக்கி வெறுப்பு அரசியல் செய்ய பாஜக துடிக்கிறது.. பயங்கரமாக எச்சரித்த தயாநிதி மாறன்.

By Ezhilarasan BabuFirst Published Oct 19, 2021, 2:00 PM IST
Highlights

மத வெறுப்பை உருவாக்கி வெறுப்பு அரசியல் செய்ய பாஜக காத்துக்கொண்டிருக்கிறது என்றும், ஆனால் அதை ஒருபோதும் தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கூறியுள்ளார்.

மத வெறுப்பை உருவாக்கி வெறுப்பு அரசியல் செய்ய பாஜக காத்துக்கொண்டிருக்கிறது என்றும், ஆனால் அதை ஒருபோதும் தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கூறியுள்ளார். சென்னையில் தனியார் மருத்துவமனை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறினார். சென்னை ராயப்பேட்டையில் தனியார் மருத்துவமனை ஒன்றின் 75வது ஆண்டு விழாவில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கலந்து கொண்டார். உடன்  திமுக நிர்வாகிகளும் பலர் கலந்து கொண்டனர். 

அந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், கிரசன்ட் மருத்துவமனை அனைத்து மதத்தினருக்கும் இலவசமாக மருத்துவம்  வழங்குவதை பாராட்டுகிறேன் என்றார், அதேபோல் மருத்துவமனை சார்பில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக நிச்சயம் அனைத்து முயற்சிகள் எடுக்கப்படும் என்றார். கடந்த 10 ஆண்டுகளாக இருண்டுகிடந்த தமிழகத்திற்கு விடியல் கொடுத்தவர் முதலமைச்சர் ஸ்டாலின் என்றார். சிறுபான்மையினருக்கு இருந்து அச்சுறுத்தல்கள் தமிழகத்தில் அடியோடு போக்கியவர் முதலமைச்சர் ஸ்டாலின் என்றார்.

இதையும் படியுங்கள்: ஷியா முஸ்லிம்கள் ஆபத்தானவர்கள், அவர்கள் எங்கிருந்தாலும் உயிர் தப்பிக்க முடியாது.. ISIS பகிரங்க எச்சரிக்கை.

இதையும் படியுங்கள்: இந்தி படிக்க சொன்ன ஊழியரை வேலைய விட்டே தூக்கிட்டோம்.. தமிழர்களிடம் மன்னிப்பு கேட்ட சொமேட்டோ நிறுவனம்.

சிஏஏ சட்டத்திற்கு இந்தியாவிலேயே முதல் முதலில் எதிர்ப்பு தெரிவித்தவர் முதலமைச்சர் ஸ்டாலின் தான் எனக் கூறிய தயாநிதி மாறன், சிஏஏவுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கை தமிழக அரசு ரத்து செய்துள்ளது என்றார். எப்படியாவது மத வெறுப்பை உருவாக்கி, தமிழகத்தில் வெறுப்பு அரசியல் செய்ய பாஜக காத்துக் கொண்டிருக்கிறது என்ற அவர், ஒருபோதும் தமிழகத்தில் மத வெறுப்பு அரசியலை அனுமதிக்கக்கூடாது என்றார். 
 

click me!