திமுகவுக்கு எதிரி பாஜகதான்.. யாருடைய தொலைபேசியையும் மத்திய அரசு ஒட்டுக்கேட்க்கவில்லை.. தெறிக்கவிட்ட அண்ணாமலை.

By Ezhilarasan BabuFirst Published Jul 21, 2021, 10:03 AM IST
Highlights

இந்தியாவில் இருக்கக்கூடிய அரசியல் தலைவர்கள், மற்றும் சமூக செயற்பாட்டாளர் - யாரும் பெகாசஸ் செயலி மூலம் உளவு பார்க்கவில்லை என்றும் வேண்டுமென்றே திட்டமிட்டு நாடாளுமன்றம் கூடுவதற்கு முதல் நாள் இந்த குற்றச்சாட்டு பரப்பப்பட்டு நாடாளுமன்ற முடக்கியுள்ளதாக அவர் குற்றம் சாட்டினர். 

சட்டத்திற்க்கு புறம்பாக யாருடைய தொலைபேசியையும் மத்திய அரசு ஒட்டுக்கேட்க்கவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் சென்னை தி நகர் பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜகவை பிரதானபடுத்தி திமுக எதிர் அரசியல் செய்வதால் திமுகவிற்கு எதிரி பாஜக தான் என கூறினார். 

இந்தியாவில் இருக்கக்கூடிய அரசியல் தலைவர்கள், மற்றும் சமூக செயற்பாட்டாளர் - யாரும் பெகாசஸ் செயலி மூலம் உளவு பார்க்கவில்லை என்றும் வேண்டுமென்றே திட்டமிட்டு நாடாளுமன்றம் கூடுவதற்கு முதல் நாள் இந்த குற்றச்சாட்டு பரப்பப்பட்டு நாடாளுமன்ற முடக்கியுள்ளதாக அவர் குற்றம் சாட்டினர். மேலும், புதிய அமைச்சரவையில் இடம் பெற்றவர்கள் கூட பிரதமர் நாடாளுமன்றத்தில், அறிமுகம் செய்துவைக்க கூட நேரம் கொடுக்காமல் அவையை எதிர்க்கட்சிகள், முடக்கியுள்ளதாக தெரிவித்தார். 

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் நிலை என்றும் அதற்கான நடவடிக்கையை நாடாளுமன்றத்தில் பெட்ரோலியத்துறை அமைச்சர் அறிவிப்பார் என்று கூறினார். அதிமுக - பாஜக கூட்டணி நல்ல முறையில் இருந்து வருவதாக தெரிவித்தார்.  பாஜகவை பிரதானபடுத்தி திமுக எதிர் அரசியல் செய்வதால் திமுக விற்கு எதிரி பாஜக தான் என கூறினார். தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை ஒளிப்பரப்பு செய்தால் நன்மை தான் என தெரிவித்தார்.
 

click me!