நியாயவிலைக் கடைகளில் ஊழியரை தவிர வெளி நபர்களுக்கு அனுமதி இல்லை.. கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு.

By Ezhilarasan BabuFirst Published Jul 21, 2021, 9:50 AM IST
Highlights

ஒரே நியாயவிலைக் கடைகளில் பணியாளர்கள் தொடர்ந்து மூன்றாண்டுகளுக்கு பணிபுரிய அனுமதிக்கக் கூடாது எனவும், மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிபவர்களை அவர்களை அருகில் உள்ள மற்ற நியாயவிலை கடைகளுக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே நியாய விலைக்கடையில் பணியாற்றும் பணியாளர்களை இடமாற்றம் செய்ய தமிழ்நாட்டு அரசின் கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார். 

ஒரே நியாயவிலைக் கடைகளில் பணியாளர்கள் தொடர்ந்து மூன்றாண்டுகளுக்கு பணிபுரிய அனுமதிக்கக் கூடாது எனவும், மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிபவர்களை அவர்களை அருகில் உள்ள மற்ற நியாயவிலை கடைகளுக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நியாயவிலைக் கடைகளில் சம்பந்தப்பட்ட பணியாளர்களைத் தவிர வெளி நபர்கள் யாரும் இருக்கக்கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

நியாய விலைக் கடைகளில் வெளி நபர்கள் யாரேனும் இருப்பது தெரியவந்தால் அவர்கள் மீது கைது உள்ளிட்ட குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நியாய விலைக் கடைகளில் வெளி நபர்களை அனுமதித்து அவர்களுக்கு துணை போகும் பணியாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூட்டுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

click me!