பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்றாமல் முட்டுக்கட்டை போட்டு வருகிறது பாஜக.. அழகிரி குற்றச்சாட்டு.

By Ezhilarasan BabuFirst Published Mar 7, 2021, 4:13 PM IST
Highlights

இதன் மூலம் மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்பதில் எப்போதுமே காங்கிரஸ் கட்சி முனைப்பாகச் செயல்பட்டு வருகிறது எனக் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் 33 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்றுவதற்காக மாநிலங்களவையில் மசோதா கொண்டு வந்து நிறைவேற்றியவர் சோனியாகாந்தி.  

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உலக மகளிர் தின வாழ்த்துச் செய்தியை பகிர்ந்துள்ளார். அதில், இந்திய மக்கள் தொகையில் சரிபாதியாக உள்ள மகளிர் கல்வி உரிமையை பாதுகாப்பது காங்கிரஸ் இயக்கம் எப்போதுமே முன்னோடியாக இருந்து வருகிறது என தனது அறிக்கையில் கே.எஸ் அழகிரி குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தி, குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில், மக்களவை சபாநாயகராக மீரா குமார் ஆகியோரை பதவியில் அமர்த்தியதில்  காங்கிரஸ் கட்சிக்கு முக்கியப் பங்குண்டு.  

இதன் மூலம் மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்பதில் எப்போதுமே காங்கிரஸ் கட்சி முனைப்பாகச் செயல்பட்டு வருகிறது எனக் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் 33 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்றுவதற்காக மாநிலங்களவையில் மசோதா கொண்டு வந்து நிறைவேற்றியவர் சோனியாகாந்தி. ஆனால் இதை மக்களவையில் இதுவரை நிறைவேற்றாமல் பாஜக பல்வேறு முட்டுக்கட்டைகளை போட்டு வருகிறது என்றும் கே எஸ் அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். 

நாடாளுமன்ற சட்டமன்றங்களில் 33 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்றுவதன் மூலமே மகளிர் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும், மக்களீர் உரிமைகளைப் பெறுவது என்பது பொருளாதார ரீதியாக  சுயசார்புகளை அடைவதன் மூலம் அவர்களின் வாழ்வில் ஏற்றம் பெற முடியும் என்றும், இந்த லட்சியங்களை அடைவதே உலக மகளிர் தின வாழ்த்துச் செய்தியாக இருக்கும் எனவோம் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
 

click me!