மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் தொகுதி உடன்பாடு.. இடம்பெறும் கட்சிகள் எவையெவை.. இன்று மாலை அறிவிப்பு..!

Published : Mar 07, 2021, 04:08 PM IST
மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் தொகுதி உடன்பாடு.. இடம்பெறும் கட்சிகள் எவையெவை.. இன்று மாலை அறிவிப்பு..!

சுருக்கம்

மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இந்திய ஜனநாயகக் கட்சி, சமத்துவ மக்கள் கட்சியுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் குமரவேல் தகவல் தெரிவித்துள்ளார். 

மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இந்திய ஜனநாயகக் கட்சி, சமத்துவ மக்கள் கட்சியுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் குமரவேல் தகவல் தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை, தேர்தல் பிரச்சாரம், வேட்பாளர் நேர்காணல் என அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக உள்ளன. இந்நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை நடத்தி வரும் அதிமுக தலைமை, தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக வெளியிட்டது. 

இந்நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய பரப்புரையை, சென்னையில் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தினந்தோறும் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் தொகுதி உடன்பாடு நிறைவடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் குமரவேல் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இந்திய ஜனநாயகக் கட்சி, சமத்துவ மக்கள் கட்சியுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்து இன்று மாலை அறிவிக்கப்படும் என்றார். அமமுகவுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தமிமுன் அன்சாரியுடன் மக்கள் நீதி மய்யம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என விளக்கமளித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?