தமிழக மக்களே உஷார்.. வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு மழை... சென்னை வானிலை ஆய்வு மையம் அதிரடி..

By Ezhilarasan BabuFirst Published Mar 7, 2021, 3:29 PM IST
Highlights

குமரிக்கடல் முதல் வட தமிழகம் வரை (ஒரு கிலோமீட்டர் உயரத்தில்)  நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக 07.03.2021 மற்றும் 08.03.2021 தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 

குமரிக்கடல் முதல் வட தமிழகம் வரை (ஒரு கிலோமீட்டர் உயரத்தில்)  நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக  07.03.2021 மற்றும் 08.03.2021 தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. மேலும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 

09.03.2021 அன்று தமிழக கடலோர மாவட்டங்களில்  ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் 10.03.2021 அன்று  தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், 11.03.2021 அன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்  அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியசும்,  மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும். என்றும் தெரிவித்துள்ளது. 
 

click me!