ஆளுநரை பதவி விலக சொல்லும் கட்சிகள்.! ஆளும் திமுகவின் அடிமைகள்.! ஜால்ரா அடிப்பதை தவிர வேறு என்ன தெரியும்.? பாஜக

By Ajmal KhanFirst Published Oct 31, 2022, 8:46 AM IST
Highlights

 அந்த மதங்களை மகிழ்விக்க இப்படி பேசுவதாக இருந்தால், அவர் தனது முதல்வர் பதவியை விட்டு விலகி விட்டு, தீபாவளி வாழ்த்து சொல்லாது இருக்கட்டும். மாறாக, அப்பொறுப்பில் இருந்து கொண்டு தீபாவளி வாழ்த்து சொல்லாமல் இருப்பதை இனியாவது நிறுத்தி கொள்ள வேண்டும் என பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

ஆளுநருக்கு எதிராக திமுக கூட்டணி

தமிழக ஆளுநருக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சனாதனம், ஆரியம், திராவிடம், பட்டியலின மக்கள், திருக்குறள் ஆகியவை குறித்து ஆளுநர் கூறும் கருத்துகள் அபத்தமானவையாகவும், ஆபத்தானவையாகவும் இருக்கின்றன. ஆளுநரின் தனிப்பட்ட ஆன்மீக நம்பிக்கைகள் குறித்து நமக்கு எந்த விமர்சனமும் இல்லை; அது பற்றி கவலைப்படவுமில்லை. ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆளுநர் பதவியில் இருந்து கொண்டு, பழமைவாத நச்சரவங்களை நாட்டில் நடமாட விடுவது அவருக்கும் அழகல்ல; அவர் வகிக்கும் பதவிக்கும் அழகல்ல! ஆளுநர் பொறுப்பில் இருந்துகொண்டு பேசுவதால்தான் இந்தளவுக்கு இதற்கு முக்கியத்துவம் தர வேண்டி உள்ளது.

"சனாதனம், ஆரியம், திராவிடம், பட்டியலின மக்கள், திருக்குறள் ஆகியவை குறித்து ஆளுநர் கூறும் கருத்துகள் அபத்தமானவையாகவும், ஆபத்தானவையாகவும் இருக்கின்றன. ஆளுநரின் தனிப்பட்ட ஆன்மீக நம்பிக்கைகள் குறித்து நமக்கு எந்த விமர்சனமும் இல்லை; அது பற்றி கவலைப்படவுமில்லை. ஆனால், (1/9)

— Narayanan Thirupathy (@narayanantbjp)

 

 

ஒத்த ஓட்டு ஓட்டைவாய் அண்ணாமலை.. உளறிக் கொட்டாதீங்க.. சும்மா எகிறி அடிக்கும் செந்தில் பாலாஜி..!

இதனை விடப் பெரிய பதவி எதையாவது எதிர்பார்த்து பா.ஜ.க. தலைமையை மகிழ்விக்க ஆர்.என்.ரவி இப்படிப் பேசுவதாக இருந்தால், அவர் தனது ஆளுநர் பதவியை விட்டு விலகி விட்டு, இதுபோன்ற கருத்துகளைச் சொல்லட்டும். மாறாக, அப்பொறுப்பில் இருந்துகொண்டு பேசுவதை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும்"  தமிழக ஆளுநருக்கு மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவர்கள் கண்டனம். சனாதனம்- நிலையான நெறி, ஆரியம்- திராவிடம்- மாயை , திருக்குறள்- புலால் உண்ணாமை, கள்ளுண்ணாமை உள்ளிட்ட பல்வேறு கூறும் பல்வேறு கருத்துக்களை ஏற்க மறுக்கும் திராவிட முன்னேற்ற கழகம் தான். அபத்தமானது, ஆபத்தானது என்பதே உண்மை. முதல்வரின் தனிப்பட்ட விருப்ப, வெறுப்பு குறித்து நமக்கு எந்த விமர்சனமும் இல்லை.

பால்வாடித்தனமான அரசியல் செய்கிறார்... அண்ணாமலையை கடுமையாக சாடிய திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவகாந்தி!!

அது குறித்த கவலையுமில்லை. ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதல்வர் பதவியில் இருந்து கொண்டு,ஒரு மத நம்பிக்கைகளுக்கு  எதிராக அடிப்படைவாத குப்பைகளை நாட்டில் நடமாட விடுவது அவருக்கும், அவர் வகிக்கும் பதவிக்கும் அழகல்ல. தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாமல், ரம்ஜானுக்கும், கிருஸ்துமசுக்கும் வாழ்த்து சொல்வதால் தான் இந்தளவுக்கு முதல்வரை விமர்சிக்க வேண்டியுள்ளது. இதனை விட லாபம் தரும் பொறுப்பு அல்லது பதவி எதையாவது எதிர்பார்த்து அந்த மதங்களை மகிழ்விக்க இப்படி பேசுவதாக இருந்தால், அவர் தனது முதல்வர் பதவியை விட்டு விலகி விட்டு, தீபாவளி வாழ்த்து சொல்லாது இருக்கட்டும். மாறாக, அப்பொறுப்பில் இருந்து கொண்டு தீபாவளி வாழ்த்து சொல்லாமல் இருப்பதை இனியாவது நிறுத்தி கொள்ள வேண்டும்.

மாறாக முதல்வர் பொறுப்பில் இருந்து கொண்டே ஹிந்துமதம் குறித்த ஆபாச, தரம் தாழ்ந்த விமர்சனங்களை செய்வோரை கண்டு கொள்ளாமல் அலட்சியமாக இருப்பது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. மேலும், இந்த கூட்டணி கட்சிகள் அனைத்துமே ஆளும் தி மு கவின் அடிமைகள். தி மு கவிற்கு ஜால்ரா அடிப்பதை தவிர வேறு என்ன இந்த மதசார்பற்ற என்ற அடைமொழியோடு கூடிய ஒட்டு மத வெறி பிடித்த தி மு க அடிமைகளான கூட்டணி கட்சியினரிடம் எதிர்பார்க்க முடியும்? தி மு க எனும் எஜமானின் ஏவலடிமைககளே இந்த கூட்டணி கட்சியினர்! என நாரயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

பெரிய பதவிக்காக பாஜகவை மகிழ்விக்கும் ஆளுநர்.! ராஜினாமா செய்து விட்டு கருத்து கூறட்டும்.!திமுக கூட்டணி கட்சிகள்

click me!