மா.சுப்ரமணி மீது வழக்கு பதிய மறுத்த அதிகாரிக்கு திமுக ஆட்சியிலும் நடந்த கொடுமை... உளவுத்துறையில் உள்ளடி வேலை!

By Thiraviaraj RMFirst Published Jun 25, 2021, 4:04 PM IST
Highlights

திமுக ஆட்சிக்கு வருகிறது. போஸ்டிங் சம்பந்தமான டிஸ்கஷன் நடக்கிறது. அப்போது பூஜாரி பெயர் வரும்போது மாநில உளவுத்துறை வன்மையாக ஆட்சேபிக்கிறது.

அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா- எடப்பாடி முதல்வராக இருந்தபோது, அமரேஷ் பூஜாரி, சிபிசிஐடி தலைவராக மாற்றப்பட்டார். அப்போது, தற்போதைய சுகாதாரத் துறை அமைச்சராக இருக்கும் மா.சுப்பரமணி மீது ஒரு பொய் வழக்கு போடும் படி அழுத்தம் கொடுக்கப் படுகிறது. 

யார் கொடுத்த அழுத்தம் என அப்போது கேள்வி எழுந்தபோது, இது முதல்வர் கொடுத்த உத்தரவு என்று சொல்லப்படுகிறது. ஆனால் பூஜாரி இது உண்மையான வழக்கில்லை என்று வழக்குப்பதிய மறுக்கிறார். அப்போதைய டி.ஜி.பி.யாக இருந்த டி.கே.ராஜேந்திரன், மா.சுப்ரமணிக்கு எதிரான அந்த வழக்கை பதிந்து, ’அவரைக் கைது செய்யவில்லை என்றால் விளைவுகளைச் சந்திக்க வேண்டும்’என்று மிரட்டுகிறார் எனக் கூறப்பட்டது.’நீங்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்து கொள்ளுங்கள், நான் பொய் வழக்குப் போட மாட்டேன்’ என்று சொல்லி விடுகிறார் அமரேஷ் புஜாரி. பணிய மறுத்ததால் வேறு வழியின்றி டி.கே.ராஜேந்திரன், அப்போதைய முதலமைச்சரிடம் சொல்லி பூஜாரியை டிரெயினிங்குக்கு தூக்கியடிக்கிறார்

.

அதன் பிறகு அந்த இடத்துக்கு ஜாபர் சேட்டைக் கொண்டு வந்து மா.சுப்ரமணியை கைது செய்து, பிறகு தலைவரையும் கைது செய்து விட்டால் நீங்கள் டிஜிபி ஆகி விடலாம் என்று கூறுகிறார் டி.கே.ராஜேந்திரன். அவரும், நான் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார் என்று வந்ததும், செய்த மற்றவையும் வரலாறு. காட்சி மாறுகிறது. திமுக ஆட்சிக்கு வருகிறது. போஸ்டிங் சம்பந்தமான டிஸ்கஷன் நடக்கிறது. அப்போது பூஜாரி பெயர் வரும்போது மாநில உளவுத்துறை வன்மையாக ஆட்சேபிக்கிறது. ஜெயலலிதாவிடம் உளவுத்துறை ஐ.ஜி.,ஆக நெருக்கமாக இருந்தவர் என்று சுட்டிக்காட்டி அவர் பெயரை எந்த நல்ல பதவிக்கும் சேர்க்காமல் பார்த்துக் கொண்டது.
 
இதில் வேடிக்கை என்னவென்றால் பூஜாரிக்குப் பிறகு ஜெயலலிதா நம்பிக்கையாக உளவுத்துறைத் தலைவராகக் கொண்டு வந்தவர்களில் தற்போதைய உளவுத்துறைத் தலைமையும் அடக்கம். ஜெயலலிதா ஆண்டபோது அனைத்து நல்ல பதவிகளிலும் கோலோச்சியவரும், இன்று வரை சசிகலா குடும்பத்தில் ஒருவராக இருக்கும் ஒருவர் தான் இன்று மிக முக்கிய பதவியில் இருந்து வருகிறார். அவரைப்பற்றி எடப்பாடி ஆட்சியில் பாதிக்கப்பட்டவர் என்று கூறி மாநில உளவுத்துறை வரவைத்ததாகத் தெரிகிறது.
 
வேண்டியவருக்கு இல்லாததைச் சொல்வதும், வேண்டாதவர்களுக்கு உண்மையை மறைப்பதும் கலாச்சாரமாக தொடர்கிறது. ஆனால், ஜெயலலிதா ஆட்சியிலும், எடப்பாடி ஆட்சியிலும் கோலோச்சிய மாநில உளவுத்துறை, இப்போதும் கோலோச்சுகிறார். நல்லவர்களின் தலைவிதியையும் தன் இஷ்டத்துக்கு தீர்மாணிக்கிறார்’’என்கிறார்கள் காக்கிகள் வட்டாரத்தினர். 
 

click me!