கோயிலைவிட, டாஸ்மாக்தான் புனிதமானதா..? இந்துமுன்னணி கண்டனம்..!

Published : Jun 25, 2021, 02:56 PM IST
கோயிலைவிட, டாஸ்மாக்தான் புனிதமானதா..? இந்துமுன்னணி கண்டனம்..!

சுருக்கம்

கொரோனா காலத்தில் கோயிலைவிட, டாஸ்மாக்தான் புனிதமானது என அரசு நடந்து கொள்வதாக இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

கொரோனா காலத்தில் கோயிலைவிட, டாஸ்மாக்தான் புனிதமானது என அரசு நடந்து கொள்வதாக இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் தமிழ்நாட்டின் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களையும் பக்தர்கள் வழிபாட்டிற்குத் திறந்து விடக்கோரி இந்து முன்னணி அமைப்பினர் பாலசுப்பிரமணியர் கோயில் முன்பு சூடம் ஏற்றி ஆர்பட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாகக் கடந்த 50 நாட்களுக்கு மேலாக மாநிலத்தில் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்கள் வழிபாட்டிற்கு தடைவிதித்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் பக்தர்களின் வழிபாட்டிற்காக அதைத் திறக்க வேண்டும் எனக் கோரி இந்து முன்னணி பெரியகுளம் பாலசுப்பிரமணி கோயில் முன்பாக சூடம் ஏற்றி ஆர்பட்டத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் மதுபானக்கடைகளை திறந்த தமிழ்நாடு அரசு கோயில்களைத் திறக்க அனுமதிக்கப்படாமல் உள்ளதைக் கண்டித்தும், வழிபாட்டுத் தலங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பப்பட்டது.

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!
மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!