Helicopter Crash: கருத்து கந்தசாமிகளே.. கொஞ்சம் அடங்குங்க.. வதந்தி பரப்பியவரின் கதி என்னாச்சு பாருங்க.

Published : Dec 10, 2021, 03:55 PM IST
Helicopter Crash: கருத்து கந்தசாமிகளே.. கொஞ்சம் அடங்குங்க.. வதந்தி பரப்பியவரின் கதி என்னாச்சு பாருங்க.

சுருக்கம்

விசாரணை நடைபெற்ற பின்னரே விபத்திற்கான காரணங்கள் தெரியவரும், எனவே ஹெலிகாப்டர் உயிரிழந்த வீரர்களின் மரியாதை கருதி தேவையற்ற வதந்திகள் பரப்புவதை தவிர்க்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

குன்னூர் அருகே நடந்த  ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக  உண்மை கண்டறியும் வரை யூகங்களை தவிர்க்க வேண்டுமென விமானப்படை எச்சரித்துள்ளது.  அதேபோல இந்த விபத்துக்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக காவல்துறையும் எச்சரித்துள்ளது. ஆனால் அதற்கு மாறாக விபத்து தொடர்பாக வதந்தி பரப்பியதாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஷிபின்  என்ற நபரை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பல வகையில் கருத்து கூறி வருபவர்களுக்கு இது கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவரது  துணைவியாருடன் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்தபோது, அவர் வந்த ஹெலிகாப்டர் குன்னூர் அருகே உள்ள காட்டேரி பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவருடன் பயணித்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் ராணுவ தளபதி ராவத்தின் மனைவியும் அடக்கம். இந்த கோர விபத்து ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. இந்நிலையில் பிபின் ராவத்தின் உடலுக்கு இன்று மாலை இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.

அதற்கான முப்படை தளபதியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. அதில் தற்போது ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.  முன்னதாக விபத்து தொடர்பாக இந்திய விமானப்படை அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டதுடன், அங்கிருந்த கருப்பு பெட்டியை கைப்பற்றி அதை ஆய்வு செய்து வருகின்றனர். அந்த ஆய்வு முடிவுகள் வெளியே வந்த பிறகே விபத்துக்கான உண்மை காரணம் தெரியவரும். இந்த ஹெலிகாப்டர் விபத்தின் தொடர்ச்சியாக அது குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்கள் சமூக வலைதளத்தில் பலரால் பரப்பப்பட்டு வருகிறது. இது ஒரு அசாதாரண சூழ்நிலையையும், தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்நிலையில் இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கடந்த 8ஆம் தேதி நடைபெற்ற ஹலிகாப்டர் விபத்து தொடர்பாக கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விசாரணை நடைபெற்ற பின்னரே விபத்திற்கான காரணங்கள் தெரியவரும், எனவே ஹெலிகாப்டர் உயிரிழந்த வீரர்களின் மரியாதை கருதி தேவையற்ற வதந்திகள் பரப்புவதை தவிர்க்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர் விபத்து மையப்படுத்தி கருத்துக்களை பதிவிட்ட யூடியூபர் மாரிதாஸ்  கைது செய்யப்பட்டுள்ளார். மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக ஆட்சியின் கீழ் தமிழகம் இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா? தேசத்திற்கு எந்த பெரிய துரோகத்தையும் செய்யக்கூடிய ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துக் கொள்ள இங்கே சுதந்திரம் இருக்கும் என்றால், அங்கே எந்த பெரிய சதி வேலை நடப்பதற்கும் சாத்தியமுண்டு. பிரிவினைவாத சக்திகள் ஒடுக்கப்பட வேண்டும் என அவர் பதிவிட்டிருந்தார்.

அவரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதேபோல முப்படை தலைமை தளபதி இறப்பின் பின்னணியில் தீவிரவாத இயக்கங்களின் தலையீடு இருப்பதாக சமூகவலைதளத்தில் பொய் செய்திகளை பரப்பிய குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஷிபிந்த்  தாசன் (24) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இது பலருக்கும் எச்சரிக்கையாக அமைந்துள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
விஜய் கை ஓங்கிவிடக்கூடாது..! வேகத்தைக் கூட்டும் பாஜக..! அண்ணாமலைக்கு முக்கியப் பொறுப்பு..!