நீங்களாவது நடவடிக்கை எடுங்க... சிறப்பு தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்த திமுக...!

Asianet News Tamil  
Published : Dec 16, 2017, 06:23 PM ISTUpdated : Sep 19, 2018, 01:41 AM IST
நீங்களாவது நடவடிக்கை எடுங்க... சிறப்பு தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்த திமுக...!

சுருக்கம்

the AIADMK and the DTV were paid and demanded to stop it and the Special Election Officer of the DMK met Bhattra In the RKNagar

ஆர்.கே.நகரில் அதிமுகவும் டிடிவி தரப்பும் பணப்பட்டுவாடா செய்வதாகவும் அதை தடுத்து நிறுத்த கோரியும் திமுகவினர் சிறப்பு தேர்தல் அதிகாரி பத்ராவை நேரில் சந்தித்து மனு அளித்தனர். 

ஆர்.கே.நகர் பிரச்சாரம் சூடு பிடித்து ரணகளம் செய்து வருகிறது. ஏற்கனவே நடைபெற இருந்த ஆர்.கே.நகர் தேர்தலால் ரத்து செய்யப்பட்டு தள்ளிப்போனது. 

 தற்போது மீண்டும் தேர்தல் ஆணையம் ஆர்.கே.நகர் தேர்தலை அறிவித்துள்ளது. இதில் முதலில் வேலுச்சாமி என்பவர் தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ஆனால்இவர் மீது ஏராளமான புகார்கள் குவிந்தன. 

ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாக எதிர்கட்சிகளும் சுயேட்சைகளும் குற்றம் சாட்டின. இதையடுத்து கடந்த முறை பணப்பட்டுவாடா புகாரால் தேர்தலை ரத்து செய்த பிரவீன் நாயர் தேர்தல் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இதையடுத்தும் ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா முடிவுக்கு வந்த பாடில்லை. கடந்த முறை தேர்தலில் பணப்பட்டுவாடா செய்பவர்கள் தேர்தலில் நிறுத்த அனுமதிக்ககூடாது என எதிர்கட்சிகள் வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. 

அதேபோன்று இந்த முறையும் திமுக அதே அறிவிப்பை எதிர்ப்பார்த்து வலியுறுத்தி வருகின்றது. ஆர்.கே.நகரில் பணப்பட்டு வாடா செய்ததாக இதுவரை 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனிடையே சிறப்பு தேர்தல் அதிகாரியாக விக்ரம் பத்ரா என்பவர் தேர்வு செய்யப்பட்டு இன்று காலை தான் சென்னை வந்தார். 

புகார்கள் குறித்து ஆதாரம் இருந்தால் சூழ்நிலையை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், ஆர்.கே.நகரில் அதிமுகவும் டிடிவி தரப்பும் பணப்பட்டுவாடா செய்வதாகவும் அதை தடுத்து நிறுத்த கோரியும் திமுகவினர் சிறப்பு தேர்தல் அதிகாரி பத்ராவை நேரில் சந்தித்து மனு அளித்தனர். 

ஆர்.கே.நகர் சிறப்பு தேர்தல் அதிகாரியிடம்  பணப்பட்டுவடா குறித்து திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி புகார் மனு அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் பணப்பட்டுவாடா செய்வதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதுள்ள தேர்தல் அதிகாரிகள் பணப்பட்டுவாடாவை தடுக்க தவறிவிட்டனர் என்றும், கூடுதல் சிஆர்பிஎஃப் வீரர்கள், பறக்கும் படையினரை பணியமர்த்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

இப்படியே போனால் காங்கிரஸ் அழிந்து விடும்.. தலைமை வேஸ்ட்.. ஆதங்கத்தை கொட்டித்தீர்த்த ஜோதிமணி!
ஓ.பி.எஸ்- டிடிவி.தினகரனுக்கு அமித் ஷா போடும் முட்டுக்கட்டை..! தவெகவுக்கு செக் வைக்கும் அமமுக..!