
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், இத்தனை குழப்பங்களுக்கும் காரணம் தி..முக.,வும், தி...னகரனும் தான் என்று பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
சென்னை, ஆர்.கே.நகரில் புதுவண்ணாரப்பேட்டை பகுதியில், அதிமுக., வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து, இன்று வாக்கு சேகரித்தனர்.
அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக அதிகாரத்தில் இருந்தபோது ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை. மக்களின் சந்திப்பைக் கூட ஸ்டாலின் கொச்சைப் படுத்துகிறார். தினகரன் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற நினைக்கிறார். அதற்காக திமுக.,வுடன் கூட்டு சேர்ந்து தினகரன் சதி செய்கிறார். அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு பெருகிவிட்டது. எனவேதான், ஆர்.கே. நகரில் 3 நாள் பிரசாரம் செய்ய ஸ்டாலின் வருகிறார்.
ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று பெண்களுக்கு அம்மா ஸ்கூட்டர் வழங்கப்படும். ஆர்.கே.நகர் தொகுதியில் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றியவர் ஜெயலலிதா.
எனவே, ஜெயாலலிதாவின் ஆசி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவோம் என்று கூறினார்.
மேலும், ஆர்.கே.நகர் மக்கள் டிடிவி தினகரனை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். அதிமுக வாக்குகளைப் பிரித்து திமுகவை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றே தினகரன் சதித்திட்டம் தீட்டுகிறார் என்று குற்றம் சாட்டினார்.
மேலும், ஆளுகின்ற கட்சியான அதிமுக ஜெயித்தால்தான் ஆர்.கே.நகர் பிரச்னைகளுக்கு சரியான வகையில் தீர்வு காண முடியும்... என்று பேசினார் எடப்பாடி பழனிசாமி.