முதல்வர் ஸ்டாலினை கட்டித் தழுவி உருகிய நடிகர்.. அவரின் தலைமைப் பண்பு உயர்ந்த இடத்தில் வைத்துள்ளதாக பெருமிதம்.

By Ezhilarasan BabuFirst Published Oct 1, 2021, 1:33 PM IST
Highlights

தனது வசனங்கள் மூலம் தமிழ் உச்சரிப்பை பாமரனுக்கும் கற்றுக் கொடுத்தவர் சிவாஜி, இன்னும் ஏழு ஆண்டில் சிவாஜி நூற்றாண்டு விழா வருகிறது, உலகத்தமிழர்கள் அதை தன் வீட்டு விழாவாக கொண்டாட வேண்டும். ஸ்டாலின் முதலமைச்சராக அதில் பங்கேற்பார் என்றார்.

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் பெருந்தன்மை, தன்னடக்கம், தலைமைப் பண்பு அவரை இந்த உயர்ந்த இடத்தில் வைத்துள்ளது என நடிகர் பிரபு தெரிவித்துள்ளார்.  நடிகர் சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தில் ஸ்டாலின் அவரது திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்திய நிலையில் பிரபு இவ்வாறு கூறினார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93வது பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்களால் அவரது பிறந்த தினத்தை கொண்டாடி வருகின்றனர். சிவாஜி கணேசனை கவுரவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் தனது முகப்பு பக்கத்தில் சிவாஜி கணேசனின் புகைப்படத்தை வைத்து கௌரவப்படுத்தி உள்ளது. 

இந்நிலையில் சென்னை அடையாறில் உள்ள சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, அரசியல் கட்சி தலைவர்கள் பிரபலங்கள், மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சிவாஜிகணேசன் சிலைக்கு மரியாதை செலுத்தினார். அப்போது கவிஞர் வைரமுத்து, நடிகர் பிரபு ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக பேசிய வைரமுத்து முதலமைச்சர் ஸ்டாலின் சிவாஜி மணி மண்டபத்துக்கு வந்து கலை உலகை பெருமைப்படுத்தி உள்ளார். அவருக்கு நன்றி, சிவாஜி கணேசன் ஒரு கலை அதிசயம், அவர் கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கா விட்டால் சரித்திர தலைவர்களுக்கு அடையாளம் குறைந்திருக்கும் என்றார்.

மேலும், தனது வசனங்கள் மூலம் தமிழ் உச்சரிப்பை பாமரனுக்கும் கற்றுக் கொடுத்தவர் சிவாஜி, இன்னும் ஏழு ஆண்டில் சிவாஜி நூற்றாண்டு விழா வருகிறது, உலகத்தமிழர்கள் அதை தன் வீட்டு விழாவாக கொண்டாட வேண்டும். ஸ்டாலின் முதலமைச்சராக அதில் பங்கேற்பார் என்றார். அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பிரபு, அண்ணன் ஸ்டாலின் அவர்கள் என் தந்தை சிவாஜியின் மீது பாசம் மரியாதையால் இங்கே வருகை தந்துள்ளார். ஸ்டாலின் அவர்களின் பெருந்தன்மை, தன்னடக்கம், தலைமைப்பண்பு அவரை இந்த உயர்ந்த இடத்தில் வைத்துள்ளது. சிவாஜியின் 94வது பிறந்த நாளை ஸ்டாலின் தலைமையில் அரசு விழாவாக கொண்டாட வாய்ப்பு அமைந்ததற்காக குடும்ப உறுப்பினர்கள், சிவாஜி ரசிகர்கள் சார்பில் அவருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலினை கட்டித் தழுவி பிரபு வரவேற்றார். 

click me!