4-ம் ஊரடங்கு உத்தரவு இப்படித்தான் இருக்கப்போகிறது... வெளியானது மோடி போட்டு வைத்துள்ள திட்டம்..!

By Thiraviaraj RMFirst Published May 15, 2020, 10:55 AM IST
Highlights

நான்காவது ஊரடங்கில் பல தளர்வுகள் இருக்கும் என்றும் மாநில அரசுகள் முடிவெடுக்க முன்னுரிமை கொடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

நான்காவது ஊரடங்கில் பல தளர்வுகள் இருக்கும் என்றும் மாநில அரசுகள் முடிவெடுக்க முன்னுரிமை கொடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

மூன்றாம் கட்ட ஊரடங்கு வரும் 17ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், சில தினங்களுக்கு முன் தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, மே மாதம்18ம் தேதி முதல் மாறுபட்ட ஊரடங்கு 4.0 நடைமுறைக்கு வரவுள்ளதாக அறிவித்தார். இயல்பு நிலை திரும்பும் வரை அந்த உத்தரவு இருக்கும் என்றும், இதுகுறித்து மூன்றாம் ஊரடங்கு முடிவதற்கு முன் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, கட்டுப்பாடு தளர்வுகள் அனுமதிக்கப்படும் பகுதிகளில் முதல்கட்டமாக சாலை போக்குவரத்துகள், விமான போக்குவரத்துகள் அனுமதிகப்படும். மாநிலங்களின் முக்கிய கோரிக்கையாக இருக்கும், ஹாட்ஸ்பாட் பகுதிகளை வரையறுக்கும் அதிகாரம் அவர்களுக்கே வழங்கப்படலாம். இந்த வார தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடனான மாநில முதல்வர்கள் சந்திப்பின்போது, இதனை பல மாநிலங்களும் வலியுறுத்தியுள்ளன’’என அவர் தெரிவித்தார். கட்டுப்பாடு தளர்வுகள் அனுமதிக்கப்படும் பகுதிகளில் முதல்கட்டமாக சாலை போக்குவரத்துகள், விமான போக்குவரத்துகள் அனுமதிகப்படும் என்று தெரிவித்துள்ளார்.

 

கடந்த மூன்று ஊரடங்குகளை போல் அல்லாமல், பெரும் தளர்வுகளுடன் அதே நேரத்தில் சமூக இடைவெளிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்த 4ம் கட்ட ஊரடங்கு இருக்கும் என்பதும் தெரிய வந்துள்ளது. அதேவேளை 4ம் கட்ட ஊரடங்கை மாநில அரசுகளே சில விஷயங்களில் வரையறுத்துக் கொள்ளலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளதால் அந்தந்த மாநிலங்கள் பாதிப்பு, பரவல்களை கவனத்தில் கொண்டு ஊரடங்கில் மாறுபடலாம் எனக் கருதப்படுகிறது. 

click me!