அனல் பறக்கும்43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்.. நேருக்கு நேர் நிர்மலா சீதாராமன்-பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

By Ezhilarasan BabuFirst Published May 28, 2021, 1:27 PM IST
Highlights

43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமானது தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.  டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொலி மூலமாக இந்த ஆலோசனை கூட்டமானது நடைபெற்று வருகிறது. 

43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமானது தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.  டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொலி மூலமாக இந்த ஆலோசனை கூட்டமானது நடைபெற்று வருகிறது. சுமாா் 8 மாதங்களுக்குப் பிறகு நடைபெறும் இந்தக் கூட்டத்தில், தமிழகத்தின் சார்பில் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து நிதித்துறை அமைச்சர் டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மற்றும் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் கலந்து கொண்டுள்ளனர்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். தமிழகத்தின் நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பழனிவேல் தியாகராஜன் முதல்முறையாக கலந்து கொண்டுள்ளார். ஜிஎஸ்டி கூட்டத்தில் தமிழகத்தில் தமிழகத்திற்கான மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீதான வரியினை விலக்கு அளிப்பது தொடர்பான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தடுப்பூசிகள் வணிக ரீதியான இறக்குமதிக்கு 5% , ஆக்சிஜன் செறிவுடிகளுக்கு 12% ஜி.எஸ்டி. விதிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே தமிழகத்திற்கு வழங்க வேண்டிய  4,321 கோடி ரூபாய் நிலுவை தொகையை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அதே நேரத்தில் பெருந்தொற்று தடுப்பூசிகள், மருந்துகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் போன்றவற்றுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க இயலாது என்று ஏற்கனவே நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நிராகரித்துள்ளார். அது குறித்தும் தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட உள்ளது. மாநில அரசுகளே கொள்முதல் செய்யக்கூடிய மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். அது குறித்தும் வலியுறுத்தப்படுகிறது.
 

click me!