கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கோவை மாவட்டத்தில் வரும் 30ம் தேதி முதல்வர் ஸ்டாலின் மீண்டும் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கோவை மாவட்டத்தில் வரும் 30ம் தேதி முதல்வர் ஸ்டாலின் மீண்டும் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
தமிழகத்தில் முதல் அலையை விட 2வது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனால், சேலம், திருப்பூர், திருச்சி, கோவை உட்பட பல மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
undefined
குறிப்பாக தலைநகரத்தை விட தொழில் நகரமான கோவையில் பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்த மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 4,734 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், வரும் மே 30ம் தேதி மீண்டும் கோவை மாவட்டத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் செல்கிறார்.மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து மாவட்ட ஆட்சியர், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.