இது நல்ல தீர்ப்பே இல்லையாம்...! யார் சொல்கிறார் தெரியுமா?

 
Published : Dec 21, 2017, 02:43 PM ISTUpdated : Sep 19, 2018, 01:42 AM IST
இது நல்ல தீர்ப்பே இல்லையாம்...! யார் சொல்கிறார் தெரியுமா?

சுருக்கம்

The 2G case is not a final verdict issued by a special court

2ஜி வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பு இறுதி தீர்ப்பு இல்லை எனவும் மேல் முறையீடு செய்யும்போது நல்ல தீர்ப்பு கிடைக்கும் எனவும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தவர் திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா. தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டுக்கான உரிமங்கள் வழங்கப்பட்டதில் அரசுக்கு ஒரு லட்சத்து ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்தன. 

இவ்வழக்கு தொடர்பாக, ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் தலைவர் ஷாகித் உஸ்மான் பல்வா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். அதன்பின் அவர்கள் ஜாமீனில் வெளிவந்தனர்.

இந்த வழக்கு விசாரணை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 14 பேரையும் நீதிபதி விடுவித்தார். குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்களை சிபிஐ நிரூபிக்க தவறியதால், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதாக சிபிஐ நீதிமன்றம் கூறியுள்ளது.

2ஜி வழக்கில் இருந்து விடுதலையான கனிமொழிக்கு டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியாவும் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், 2ஜி வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பு இறுதி தீர்ப்பு இல்லை எனவும் மேல் முறையீடு செய்யும்போது நல்ல தீர்ப்பு கிடைக்கும் எனவும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

மேலும் டிடிவி தினகரனும் திமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் எனவும் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!