
கடந்த 6 ஆண்டுகளாக 2ஜி அலைகற்றை குறித்து தொடர்ந்து இழுபறியில் இருந்து வந்த வழக்கு இன்றுடன் முடிவு வந்தது.
இந்த விவகாரத்தில் முக்கிய நபர்களாக கருதப்பட்ட,கனிமொழி மற்றும் ராசா விடுதலை செய்யப்பட்டனர்.
பின்னர் மகிழ்ச்சி வெள்ளத்தில் இருக்கும் திமுகவினர் பல இடங்களில், பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மகிழ்ந்து வருகின்றனர்
இது குறித்து,கனிமொழி தன்னுடைய கணவருடன் இணைந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்
பல தடைகளை உடைத்து நியாயத்தை நிலைநாட்டியதாகவும்,மேலும் எங்கள் மீது சுமத்தப்பட்டது வீண்பழி என்றும் கனிமொழி தெரிவித்துள்ளார்.
இதெலாம் ஒருபக்கம் இருக்கும் போது கனிமொழி கணவர் கருமை நிற ஆடையும்,கனிமொழி சிகப்பு நிற சேலையையும் அணிந்து இருந்தனர்.
ஆக மொத்தத்தில்,திமுக கட்சி கொடியை தெளிவாக காண்பித்து உள்ளனர். அதுமட்டும் இல்லாமல்,இந்த வழக்கில் இருந்து விடுபட்ட பின்பு, கனிமொழி அரசியலில் மும்முரமாக செயல்பட வாய்ப்பு அதிகமாகவே உள்ளது என்று கூறலாம்.
அதே வேளையில்,இந்த ஆறு ஆண்டு காலமாக கனிமொழி அரசியல் ரீதியாக அவ்வளவு ஒன்னும் மும்முரமாக செயல்பட வில்லை என்றே கூறலாம்.