27 ஆம் தேதி நடைபெற உள்ள, +2 கடைசித் தேர்வினை தள்ளிவைக்க வேண்டும்..!! ஆசிரியர்கள் சங்கம் அதிரடி கோரிக்கை..!!

By Ezhilarasan BabuFirst Published Jul 16, 2020, 4:59 PM IST
Highlights

பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களைச் சார்ந்தவர்கள் என்பதால் வீட்டில்  போதிய அடிப்படை வசதிகளின்றி இருப்பதால் 90 சதவீத மாணவர்கள் பள்ளிகளில் படிப்பதை மட்டுமே நம்பியிருப்பார்கள். 

12 ஆம் வகுப்பு தேர்வில் கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு அரசுபள்ளி மாணவர்கள் கூடுதல் தேர்ச்சி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது எனவும் 27-ந்தேதி நடக்கவுள்ள. +2 கடைசித் தேர்வினை தள்ளிவைக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தில் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார் அதில் கூறப்பட்டுள்ளதாவது:- மார்ச் 2020.நடந்த பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. 2019-20 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்புக்கான புதிய பாடத்திட்டம் அறிமுகம், தேர்வுநேரத்தில் கொரோனா அச்சுறுத்தல் ஆகியவைகளை எதிர்கொண்டு அரசாங்கத்தின் சரியான நெறிமுறைகளோடு ஆசிரியர்கள் எடுத்துகொண்ட தனிகவனம், குறிப்பாக மாணவர்களின் ஈடுபாடு  போன்ற காரணங்களால் இன்று 85.94 விழுக்காடு தேர்ச்சிப் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. 

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
 கடந்த கல்வியாண்டில் அரசுபள்ளி மாணவர்களின் தேர்ச்சி 84.54 சதவிகிதமான இருந்தது.  ஆனால் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 85. 96 ஆக உயர்ந்துள்ளது. கடந்த கல்வியாண்டில் மாவட்டங்களின் தேர்ச்சி விகிதம்  90 சதவீதத்திற்கு மேல் இருந்தது.  இந்த ஆண்டும் 10  மாவட்டங்கள் 90 % மேல் மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றிருப்பது வரவேற்புக்குரியது. அரசுபள்ளி மாணவர்களை பொறுத்தவரை தினக்கூலி வேலைசெய்பவர்கள், பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களைச் சார்ந்தவர்கள் என்பதால் வீட்டில்  போதிய அடிப்படை வசதிகளின்றி இருப்பதால் 90 சதவீத மாணவர்கள் பள்ளிகளில் படிப்பதை மட்டுமே நம்பியிருப்பார்கள். 

பள்ளிநேரம் தவிர  தொடர்ந்து காலை 6.30 முதல் இரவு 7.30 மணிவரை ஆசிரியர்களின் தொடர் சிறப்புபயிற்சியும் அந்த காலகட்டத்தில் சுண்டல், வாழைப்பழம் மற்றும் சிற்றுண்டியும் வாழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், ஏற்கனவே கடைசித்தேர்வு எழுதாமல் போன மாணவர்களுக்கு மறுவாய்ப்பாக வரும் 27 ந்தேதி தேர்வு நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளதை வரவேற்பதுடன், அத்தேர்வோடு தோல்வியடைந்த மாணவர்களுக்கு உடனடி தேர்வுகளையும் சேர்த்து வைக்கவும் உடனடித்தேர்வுக்கு விண்ணப்பிக்க வசதியாக 27 ந்தேதி நடைபெறும் தேர்வினை இரண்டு வாரங்கள் ஒத்திவைக்க ஆவனசெய்யும்படி மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறோம். என அதில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!