
தமிழக அரசின் தவறுகளால், நிர்வாகச் சீர்கேட்டால், ஊழல் டெண்டர்களால், முறைகேடுகளால் ஏற்படும் இழப்பை மக்கள் மீது திணிப்பதைமின் கட்டண உயர்வுக்கு காரணம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-
தமிழக மக்கள் மீதான கூடுதல் சுமையாக மின் கட்டண உயர்வை சுமத்தியுள்ளது. இந்தக் கட்டண உயர்வு, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிக அதிகமாக இருப்பதால், ஏழை நடுத்தர மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மின் கட்டணத்தை தொடர்ந்து புதிய இணைப்பு, சேவை கட்டணம் இரு மடங்காக உயர்வு.
கடந்த 10ஆம் தேதி முதலாக அமல்படுத்தப்பட்டுள்ள புதிய இணைப்புக் கட்டணம், மீட்டர் காப்பீடுக் கட்டணம், வளர்ச்சிக் கட்டணம், பதிவுக் கட்டணம் ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளன. மின்விநியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு ஏற்ப இந்த கட்டணங்கள் இருமடங்காக உயர்த்தி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்.
இதையே மாற்று அரசுகள் செய்திருந்தால் மாபெரும் ஆர்ப்பாட்டம் செய்திருக்கும் திமுக, ஆட்சியில் இருக்கும்போது, கனத்த இதயத்துடன் மின்கட்டணத்தை ஏற்றுகிறார்களாம்…. இதயமே இல்லாமல் மக்கள் மீது கட்டணத்தை ஏற்றிவிட்டு, கனத்த இதயம், என்ற கதையை ஏற்கமுடியாது. திமுக அரசின் திறமையின்மையால், தவறுகளால் ஏற்ப்பட்டிருக்கும் இழப்பினையெல்லாம் மக்கள் தலை மீது சுமத்தலாமா? தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வு சாமானிய மக்களுக்கு மட்டுமல்ல சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு மிகப் பெரும்
பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது இதை பாரதிய ஜனதா கட்சி கடுமையாகக் கண்டிக்கிறது. மின்கம்பங்கள் மூலமாக மின்சாரம் விநியோகிக்கப்படும் பகுதிகளில் மீட்டர் காப்பீடு கட்டணம் ரூ.600-ல் இருந்து ரூ.750, இணைப்பு கட்டணம் ரூ.500-ல் இருந்து ரூ.1,000, பதிவுக் கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.200, வளர்ச்சிக் கட்டணம் ரூ.1,400-ல் இருந்து ரூ.2,800, வைப்புத்தொகை ரூ.200-ல் இருந்து ரூ.300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல், பூமிக்கு அடியில் கேபிள் வழியாக மின் விநியோகம் நடைபெறும் பகுதிகளில் ஒருமுனை மின் இணைப்புக்கான பதிவுக் கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.200, வளர்ச்சிக் கட்டணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரம், இணைப்புக் கட்டணம் ரூ.500-ல் இருந்து ரூ.1,000, மீட்டர் காப்பீடு கட்டணம் ரூ.600-ல் இருந்து ரூ.750, வைப்புத்தொகை ரூ.200-ல் இருந்து ரூ.300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு மின் கட்டண விவரம்.
ஸ்மார்ட் மீட்டர் பொருத்தியதும் ஒருமுனை மின் இணைப்புக்கு மீட்டர் வைப்புத் தொகையாக ரூ.5,200-ம், மும்முனை மின்இணைப்புக்கு ரூ.7,100-ம் கூடுதலாக வசூலிக்கப்படும். வீட்டு மின்இணைப்பு பெயர் மாற்றம் செய்யும் கட்டணம் ரூ.300-ல் இருந்து ரூ.600 ஆகவும், பழுதடைந்த மீட்டரை மாற்றுவதற்கான கட்டணம் ஒருமுனை மின்இணைப்புக்கு ரூ.500-ல்இருந்து ஆயிரம் ரூபாயாகவும், மும்முனை மின்இணைப்புக்கு ரூ.750-ல் இருந்து ரூ.1,500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: எடப்பாடி பழனிசாமியை முந்திய ஓபிஎஸ்.. எந்த விஷயத்தில் தெரியுமா?
ஒரு தனியார் நிறுவனம் மக்களை ஏமாற்றுகிறது என்றால் அரசாங்கத்திடம் சென்று முறையிடலாம் ஆனால் ஒரு மக்களை வஞ்சித்து ஏமாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டால் மானிய மக்கள் வேறு எங்கு செல்ல முடியும். தமிழக அரசே மிகப்பெரிய சுரண்டலில் ஈடுபடுகிறது- மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்! தயவு செய்து இதைப் புரிந்து கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: #TNbreakfast: கோவில் நிதி மூலம் காலை உணவுத் திட்டம்.. முதல்வர் ஸ்டாலினுக்கு ஐடியா கொடுக்கும் கி.வீரமணி..!
திமுக ஆட்சிக்கு வந்தால் மாதம் ஒருமுறை மின்சார பயன்பாடு கணக்கிடப்பட்டு மின் கட்டணம் வசூலிக்கப்படும் என்று திமுக தன் தேர்தல் அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டு இருந்தது இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டணம் வசூலிப்பது மக்களை வஞ்சிக்கும் செயலாகும்.
தற்போதைய TNEB மின் கட்டணம்: 500 யூனிட் பயன்படுத்தினால் ரூ. 1330/- இதே 501 யூனிட் பயன்படுத்தினால் ரூ. 2127/- ஆக 1 யூனிட் அதிகமாக இருந்தால் ரூ.797/- கூடுதலாக செலுத்த வேண்டும்.
தமிழக அரசு இந்த முறையை மாற்றி, மாதாந்திர மீட்டர் ரீடிங் செய்ய வேண்டும். தயவு செய்து மக்கள் அனைவரும் ஆளும் திமுக அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும் மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும். வேண்டுகிறேன். நீங்கள் 1000 யூனிட்களை 2 மாதங்களுக்கு பயன்படுத்தினால், நாங்கள் ரூ.5420/- செலுத்த வேண்டும். ஆனால், மாதாந்திர முறை அமல்படுத்தப்பட்டதால், மாதம் ரூ.1330/- மட்டுமே செலுத்த வேண்டும். எனவே, இரண்டு மாத கட்டணம் ரூ.2660/- மட்டுமே. நாம் ரூ.2760/- சேமிக்க முடியும்.
தமிழக அரசின் தவறுகளால், நிர்வாகச் சீர்கேட்டால், ஊழல் டெண்டர்களால், முறைகேடுகளால் ஏற்படும் இழப்பை மக்கள் மீதா திணிக்க வேண்டும். மின் கட்டண உயர்வு பொதுமக்கள், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றின் மீதான கடுமையான தாக்குதல். ஆகவே தமிழக அரசு மின் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மின்சாரம் மக்களுக்கு ஒளியூட்ட வேண்டுமே தவிர இருளில் தள்ளக் கூடாது.திமுக அரசின் இரண்டு மாத கட்டண சுமைக்கும், கூடுதலாக அதிகரித்த மின்கட்டணத்திற்கும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறோம்.