அதிமுக கிளை செயலாளருக்கு கூட தகுதி இல்லாதவர் பண்ருட்டியார்.. இபிஎஸ் விமர்சனத்திற்கு ஓபிஎஸ் ஆதரவாளர் பதிலடி.!

By vinoth kumarFirst Published Sep 17, 2022, 8:26 AM IST
Highlights

எந்த எந்த கட்சிக்கு போய் நீங்க அறிவுரை சொன்னீர்களோ அந்த கட்சி எல்லாம் ஒன்றுமில்லாமல் போய்விட்டது. எனவே உங்களது அறிவுரை எங்களுக்கு தேவை இல்லை. அதிமுக கிளை செயலாளருக்கு இருக்கும் தகுதி கூட பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு இல்லை என இபிஎஸ் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். 

பண்ருட்டி ராமச்சந்திரனை பற்றி தரக்குறைவாக குறைவாக பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார். 

அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மோதல் வெடித்துள்ளது. இந்நிலையில் அதிமுக மூத்த நிர்வாகியான பண்ருட்டி ராமசந்திரனை ஓபிஎஸ் திடீரென சந்தித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பண்ருட்டி ராமசந்திரன்;- எடப்பாடி பழனிசாமி தலைமையை மக்கள் நிராகரிக்கரிப்பதாகவும்,  தலைமை பண்பு இல்லை என்பது நிரூபணம் ஆகியுள்ளது. அதிமுகவில் தற்போதைய போக்கு நீடித்தால் கட்சி அழியும். நீதிக்கட்சி எப்படி அழிந்ததோ அப்படி அழியும் என கூறியிருந்தார். இதற்கு இபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார். 

இதையும் படிங்க;- அதிமுகவில் இணையும் சசிகலா ? அய்யய்யோ, இல்லைங்க.! இது வேற மேட்டர்.. கே.பி முனுசாமி கொடுத்த சிக்னல்.!

அதிமுகவுக்கு பண்ருட்டி அறிவுரை கூறுகிறார். அவருக்கு அந்த தகுதி இல்லை. ஜெயலலிதாவை விமர்சனம் செய்து விட்டு வெளியேறியவர். பின்னர், பாமகவில் சேர்ந்து சட்டமன்ற உறுப்பினராகி யானை மீது அமர்ந்து சட்டமன்றத்துக்கு வந்தார். பின்னர், அந்த யானையையே மறந்து விட்டார். அதன் பிறகு, தேமுதிகவுக்கு சென்றார். அந்த கட்சியையும் மூழ்கடித்து விட்டார். அதிமுக நன்றாக சென்று கொண்டிருக்கிறது. எந்த எந்த கட்சிக்கு போய் நீங்க அறிவுரை சொன்னீர்களோ அந்த கட்சி எல்லாம் ஒன்றுமில்லாமல் போய்விட்டது. எனவே உங்களது அறிவுரை எங்களுக்கு தேவை இல்லை. அதிமுக கிளை செயலாளருக்கு இருக்கும் தகுதி கூட பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு இல்லை என இபிஎஸ் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். 

இந்நிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில்  ஓபிஎஸ் இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புகழேந்தி;- பண்ருட்டி ராமச்சந்திரன், அண்ணாவுடன் அரசியல் பயணத்தை தொடங்கியவர். எம்.ஜி.ஆர் உடன் நெருங்கிப் பழகியவர். அவரை பற்றி தரக் குறைவாக பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும். 

மேலும் உங்களுடைய அறிவுரை தேவையில்லை என்று யாரை பார்த்து சொல்கிறார் இபிஎஸ். எம்ஜிஆருடன் நெருங்கிப் பழகியவர் பண்ருட்டி ராமச்சந்திரன். சரியான தலைவர் இல்லை என்றால் கட்சி நிலை சரிந்து போகும். பெரியவர்களை பற்றி பேசும் போது நிதானமாக பேச வேண்டும். அவரைப் பார்த்து தரக் குறைவாக பேசுவதை எடப்பாடி பழனிசாமி தவிர்க்க வேண்டும் என புகழேந்தி கூறியுள்ளார். 

இதையும் படிங்க;-  “அதிமுகவில் அந்த 4 பேர்.. கொடநாடு வழக்கில் பகீர் சம்பவங்கள்” - எடப்பாடிக்கு பயம் காட்டிய ஆர்.எஸ் பாரதி !

click me!