எடப்பாடி பழனிசாமியை முந்திய ஓபிஎஸ்.. எந்த விஷயத்தில் தெரியுமா?

By vinoth kumar  |  First Published Sep 17, 2022, 6:46 AM IST

ஜெயலலிதா இருக்கும் வரை எஃகு கோட்டையாக இருந்த அதிமுக தற்போது சிதறு தேங்காய் போல சிதறி கிடக்கிறது. இந்நிலையில், அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ், இபிஎஸ்க்கு இடையே உச்சக்கட்ட மோதல் வெடித்தது. 


பிரதமர் மோடி இன்று பிறந்தநாள் கொண்டாட உள்ள நிலையில், ஒருநாள் முன்னதாகவே ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தரப்பை அதிர்ச்சியடைய செய்துள்ளார். 

ஜெயலலிதா இருக்கும் வரை எஃகு கோட்டையாக இருந்த அதிமுக தற்போது சிதறு தேங்காய் போல சிதறி கிடக்கிறது. இந்நிலையில், அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ், இபிஎஸ்க்கு இடையே உச்சக்கட்ட மோதல் வெடித்தது. ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜெயசந்திரன் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதுது செல்லாது. ஜூன் 23ம் தேதி இருந்த நடைமுறையே தொடர வேண்டும் என கூறி தீர்ப்பு வழங்கினார். 

Tap to resize

Latest Videos

இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்த வழக்கில் தனிநீதிபதி தீர்ப்பை ரத்து செய்து இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இபிஎஸ்க்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இதனிடையே, சசிகலா, டி.டி.வி.தினகரன் உடன் இணைந்து செயல்பட ஓபிஎஸ் முடிவு செய்துள்ளார். ஆனால், எடப்பாடி பழனிசாமியோ சசிகலா, டிடிவி.தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை ஒருபோதும் அதிமுகவில் இணைத்து கொள்ள முடியாது என்ற முடிவில் தீர்க்கமாக இருந்து வருகிறார். பாஜகவின் ஆதரவு ஓபிஎஸ்க்கா, இபிஎஸ்க்கா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி  இன்று தனது 72-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். பிரதமரின் பிறந்தநாளையொட்டி பாஜகவினர் பல்வேறு போட்டிகள், அன்னதானம், சிறப்பு பிரார்த்தனைகள் நடத்த தயாராகிவிட்டனர். இதனிடையே, பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் ஒரு நாளைக்கு முன்னதாகவே பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில்;- 72வது பிறந்தநாளை கொண்டாடும்ங இந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில், நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்புடன் தேசத்திற்கு நீங்கள் இன்னும்  பல ஆண்டுகள் சேவையை நிறைவேற்ற வாழ்த்துகிறேன். இந்த பிரதமராகப் பதவியேற்ற நாள் முதல் இன்று வரை  ஒவ்வொரு கொள்கை உருவாக்கம் மற்றும் நடவடிக்கைகளிலும்  இந்தியாவை முதன்மையாக வைத்திருப்பதில் உறுதியாக இருக்கிறீர்கள். எப்போதும் தேசத்திற்கு பயனுள்ள மற்றும் தொடர்ந்த சேவையை உறுதி செய்து கடவுளின் ஆசிர்வாதங்கள் உங்கள் வாழ்வில் தொடர்ந்து இருக்க பிராத்திக்கிறேன் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 

click me!