வட்டாட்சியர் அலுவலகம் ஜப்தி, கம்ப்யூட்டர் டேபிள்கள் எடுத்து செல்லப்பட்டதால் நின்றபடி வேலை பார்த்த ஊழியர்கள்.

Published : Feb 05, 2021, 10:58 AM IST
வட்டாட்சியர் அலுவலகம் ஜப்தி, கம்ப்யூட்டர் டேபிள்கள் எடுத்து  செல்லப்பட்டதால் நின்றபடி வேலை பார்த்த ஊழியர்கள்.

சுருக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பொருட்களை நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்ற ஊழியர்கள் நேற்று ஜப்தி செய்தனர். 

ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பொருட்களை நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்ற ஊழியர்கள் நேற்று ஜப்தி செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது குன்னூர் கிராமம். இக்கிராமத்தில் கடந்த 1995 ஆம் ஆண்டு ஆதிதிராவிட நலத்துறை சார்பில் குடியிருப்பு கட்டுவதற்காக ஹன்ஸ்ராஜ் சந்திரன் என்பவரின் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டது. 

ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலத்திற்கு அரசு பணம் வழங்க வேண்டும் என்று கூறி கடந்த 2010 ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பு நீதிமன்றத்தில் ஹன்ஸ்ராஜ் சந்திரன் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுமார் 10 வருடமாக நடைபெற்று வந்த வழக்கில் நேற்று  தீர்ப்பளித்த சார்பு நீதிமன்ற நடுவர் கதிரவன் வட்டாட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்து ரூபாய் 10,53,770 ரூபாயை ஹன்ஸ்ராஜ் சந்திரனிடம் வழங்க உத்தரவிட்டார். 

அதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த நீதிமன்ற ஊழியர்கள் அலுவலகத்தில் உள்ள சேர் டேபிள்களை ஜப்தி செய்து வாகனத்தில் ஏற்றினார்கள். கம்ப்யூட்டர் டேபிள்கள் எடுத்து  செல்லப்பட்டதால் கம்ப்யூட்டர்கள் தரையில் இறக்கி வைக்கப்பட்டது. சேர்களும் பறிமுதல் செய்யப்பட்டதால் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் நின்று கொண்டே தங்கள் பணியை தொடர்ந்தனர். வட்டாட்சியர் அலுவலகம் ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!