ஸ்டாலின் மகள் வீட்டில் ரெய்டுவிட்ட மோடி, ஓபிஎஸ், இபிஎஸ், எல்லோருக்கும் நன்றி.. ஆர் எஸ். பாரதி நக்கல்.

By Ezhilarasan BabuFirst Published Apr 3, 2021, 11:50 AM IST
Highlights

கெஞ்சி காலில் விழுந்து மோடி அரசை கேட்டு கொண்டதால் இந்த சோதனை நடத்தி இருக்கிறார்கள்.அவர்கள் இங்கு இருந்தது எடுத்து சென்ற பணம் ஒரு இலட்சத்து முப்பத்தி ஆறாயிரம் மட்டுமே. வீட்டு செலவுக்காக வைத்து இருந்த பணம். அதையும் வங்கியில் இருந்த எடுத்த ஆதாரம் உள்ளது என தெரிவித்தார்.

திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை மற்றும் அவரது மருமகன் சபரீசனின் நீலாங்கரை இல்லத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை நிறைவடைந்தது. வருமான வரித்துறை சோதனை சுமார் 11 மணி நேரமாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து நீலாங்கரை இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. ஏறத்தாழ பதினொரு மணி நேரமாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்றதாக தெரிவித்தார். ஊடகங்களில் வரும் கருத்துகணிப்புகளை ஜீரணிக்க முடியாமல் வயித்தேரிச்சல் காரணமாக ஏதேனும் புழுதி வாரி தூற்ற வேண்டும் என்ற கெட்ட எண்ணத்துடன் உள்நோக்கத்தோடு சோதனை செய்ய அனுப்பி இருக்கிறார்கள். 

இந்த சோதனையை செய்த மோடிக்கு நன்றி சொல்ல வேண்டும் என கூறிய அவர், மடியில் கணமில்லை பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார். அப்பழுக்கு அற்றவர்களாக அரசியலில் இருந்து வருவதாகவும், ஐந்து முறை ஆட்சியில் இருந்து இருக்கிறோம் எனவும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார். எஸ்.பி.வேலுமணி எந்த துறையை வைத்து கோடி கோடியாக கொள்ளை அடித்து இருக்கிறாரோ அந்த இலாக்கா ஒரு காலத்தில் ஸ்டாலினிடம் இருந்தது எனவும், துணை முதல்வராகவும், பத்து ஆண்டு காலம் எதிர்கட்சி தலைவராகவும் இருந்து இருக்கிறார். ஸ்டாலின் மீதும், எங்கள் மீதும் எந்த வழக்கும் போட முடியவில்லை. ஆனால் நூறு கோடி அபராதம், நான்கு ஆண்டுகள் சிறையில் இருந்தவர்களின் கட்சியின் சார்பாக கொடுக்கப்பட்ட புகாரை ஏற்று சோதனை நடைபெற்றுள்ளது என கூறினார். கெஞ்சி காலில் விழுந்து மோடி அரசை கேட்டு கொண்டதால் இந்த சோதனை நடத்தி இருக்கிறார்கள்.

 

அவர்கள் இங்கு இருந்தது எடுத்து சென்ற பணம் ஒரு இலட்சத்து முப்பத்தி ஆறாயிரம் மட்டுமே. வீட்டு செலவுக்காக வைத்து இருந்த பணம். அதையும் வங்கியில் இருந்த எடுத்த ஆதாரம் உள்ளது என தெரிவித்தார். வந்த அதிகாரிகள் ஏமாற்றத்துடன் சென்றார்கள். மேலும் தாங்கள் அப்பழுக்கற்றவர்கள் என நிருபித்துவிட்டு சென்றார்கள். அதிகாரிகளுக்கும், ஏற்ப்பாடு செய்த மோடிக்கும், காரணமாக இருந்த இ.பி.எஸ், ஓ.பி.எஸ் க்கு நன்றி தெரிவித்துகொள்கிறேன். எமர்ஜன்ஸி காலத்தில் ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுத்ததை போல தற்போது திமுக தலைவர் ஸ்டாலி மகள் என்ற காரணத்திற்காக அவரது மகள் வீட்டில் சோதனை நடைபெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.  

 

click me!