சுற்றி வளைக்கும் வருமான வரித்துறை... இன்றும் அதிமுக- திமுக பிரமுகர்கள் வீட்டில் அதிரடி ரெய்டு..!

Published : Apr 03, 2021, 11:26 AM ISTUpdated : Apr 03, 2021, 11:27 AM IST
சுற்றி வளைக்கும் வருமான வரித்துறை... இன்றும் அதிமுக- திமுக பிரமுகர்கள் வீட்டில் அதிரடி ரெய்டு..!

சுருக்கம்

 எஸ்.என்.ஜே நிறுவனத்தினத்தின் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிறுவனத்தின் அதிபர் ஜெயமுருகன் கருணாநிதி கதை எழுதிய உளியின் ஓசை உள்ளிட்ட படங்களை தயாரித்தவர்.

தேனியில் அதிமுக, புதுக்கோட்டையில் திமுக பிரமுகர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தேர்தல் பணப் பட்டுவாடா தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில், வருமான வரி அதிகாரிகள், சென்னை உட்பட, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். தன் தொடர்ச்சியாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை வீடு, மருமகன் சபரீசனின் அலுவலகம் மற்றும் நண்பர்கள் வீடு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போதைய அமைச்சரவையில் உள்ள அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜேந்திர பாலாஜியின் டிரைவர் உட்பட, தமிழகம் முழுதும், 28 இடங்களில், வருமான வரி அதிகாரிகள், நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

இந்நிலையில், தேனி மாவட்டம் போடியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அலுவலகம் அருகே வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதிமுகவை சேர்ந்த தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் குறிஞ்சி மணி வீட்டில் ரெய்டு நடந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வி.கோட்டையூரில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். திமுக வேட்பாளர் ரகுபதியின் ஆதரவாளரான ராமதிலகம் மங்களராமன் என்பவர் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். எஸ்.என்.ஜே நிறுவனத்தினத்தின் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிறுவனத்தின் அதிபர் ஜெயமுருகன் கருணாநிதி கதை எழுதிய உளியின் ஓசை உள்ளிட்ட படங்களை தயாரித்தவர்.

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி