தனியரசுவுக்கு ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் மீது என்னதான் கோபமா தெரியவில்லை! கிடைக்கும் இடங்களிலெல்லாம் அவரை சீண்டி, நோண்டி சிதறவைக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் ஜக்கிவாசுதேவ் வை விமர்சித்தவர் சமீபத்தில் கோயமுத்தூரில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்திலும் அவரை புரட்டி எடுத்திருக்கிறார். கூடவே ஈஷா யோகா மையத்தின் அடிப்படை விஷயமான யோகாவுக்கு எதிராகவும் போர் முரசு கொட்டியிருக்கிறார். நிகழ்வில் பேசிய தனியரசு “யோகாவை பள்ளிகளில் கட்டாய பாடமாக்குவதா மத்திய அரசு சொல்லுது. இதை நாம வன்மையா எதிர்க்கணும். யோகா அப்படிங்கிறது ஒரு மதத்தோட ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களின் குறியீடு. யோகா சொல்லிக் கொடுக்கிற நபர்களைப் பாருங்க தலையில குடுமி வெச்சுக்கிட்டு, தாடி வெச்சுக்கிட்டு ஒரு மதத்துக்கான பிரதிநிதியாதான் இருப்பாங்க. இந்த பதஞ்சலி ராம்தேவ் பாருங்க அதே மாதிரிதான் இருப்பாரு. வயித்த எக்குறாரு, குட்டிக்கர்ணம் போடுறாரு என்னென்ன குரளி வித்தையெல்லாமோ பண்றாரு. அதே மாதிரிதான் கோயமுத்தூர்ல ஜக்கிவாசுதேவும் பண்றாரு. அதே தாடி, குடுமி. அதை மறைக்க ஒரு உருமா கட்டு. இந்த ஜக்கி வாசுதேவ் பண்றதெல்லாம் அக்கிரமம்யா. அவனவன் காடு கரையை வித்து பெத்த பிள்ளைங்களை எம்.டெக்., எம்.இ..ன்னு படிக்க வெச்சா இந்தாளு அந்த புள்ளைங்களை பிடிச்சு யோகா கத்துக் கொடுத்து மொட்டையடிச்சு மூளையில உக்கார வைக்கிறார்.பெத்த அப்பன் கூட தன் பொண்ணை பார்க்க போக முடியலை. ஏதோ சிவனை கும்பிட அந்த மையத்துக்கு போற புள்ளைங்க இந்த ஆளு பண்ணுற வித்தையில அங்கேயே செட்டிலாகிடுதுங்க. ஊரான் வீட்டு பிள்ளையை இப்படி பாடா படுத்துற மனுஷன் தன்னோட மகளுக்கு மட்டும் ஏன் மொட்டையடிக்கலை?யோகாவும், மொட்டையும், ருத்ராட்சக் கொட்டையும் நல்லதுன்னா தன்னோட பொண்ணுக்கும் அதை செஞ்சு விட்டிருக்க வேண்டிதானே? ஆனா அந்த பொண்ணு மட்டும் பவுசா கல்யாணம் பண்ணிக்கிட்டு லண்டன், அமெரிக்கான்னு பறந்துட்டு இருக்குது. நம்ம தமிழனுக்கு எதுக்குய்யா யோகா? நாம காடு கரையில வேலை பார்த்துட்டு பசிக்கு சோறு பத்தாம அலையுற பசங்க. ஆனா தின்ன சோறு செரிக்க வழியில்லாம நோய் வந்தவங்கதான் யோகா கத்துக்கணும். நமக்கு எதுக்கு யோகா? ஒரு காலத்துலேயும் நம்ம புள்ளைங்களுக்கு யோகாவை கட்டாயமாக்க அனுமதிக்கவே கூடாது.” என்று சவால் விட்டிருக்கிறார். கம்யூனிஸ்டுகள், தலிகளின் அட்டாக்கினால் களேபரப்பட்டுக் கிடந்த் ஈஷா மையம் சமீப காலமாகதான் அமைதியை மீட்டிருக்கிறது. இப்போது தனியரசுவின் மூலம் அடுத்த ரவுண்டு ஆரம்பமாகும் போலிருக்கிறது.