"செத்தாலும் சாவேனே தவிர.." சத்தியம் செய்து சொன்ன தங்கத்தமிழ்ச்செல்வனா இப்படி..?!

By ezhil mozhiFirst Published Jun 28, 2019, 1:00 PM IST
Highlights

எம்பி தேர்தலில் அமமுக படுதோல்வி அடைந்ததை அடுத்து அமமுக வின் முக்கிய நிர்வாகியான  தங்கத்தமிழ்செல்வன் அக்கட்சியிலிருந்து விலகி, திமுக வில் இணைந்தார்.
 

"செத்தாலும் சாவேனே தவிர.." சத்தியம் செய்து சொன்ன தங்கத்தமிழ்ச்செல்வனா இப்படி..?!

எம்பி தேர்தலில் அமமுக படுதோல்வி அடைந்ததை அடுத்து அமமுக வின் முக்கிய நிர்வாகியான தங்கத்தமிழ்செல்வன் அக்கட்சியிலிருந்து விலகி, திமுக வில் இணைந்தார்.அண்ணா அறிவாலயத்தில் இன்று தனது ஆதரவாளர்களுடன் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார் தங்கதமிழ்ச்செல்வன். பின்னர் செய்தியாளர் சந்திப்பின் போது, 

"தனது உழைப்பை கண்டு தலைமை எனக்கு பதவி தருமென நம்புகிறேன்...நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் ஒரு நல்ல முடிவை எடுத்துள்ளனர்...ஒற்றை தலைமை இருப்பதால்தான் ஸ்டாலின் தேர்தலில் வெற்றி பெற்று உள்ளார். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற அண்ணாவின் கொள்கையை கடைபிடிப்பவர் ஸ்டாலின்.. ஸ்டாலினால் மட்டுமே நல்ல திட்டங்களை கொடுக்க முடியும் என்பதை தேர்தல் முடிவு காட்டியுள்ளது. தன்மானத்தை இழந்து அதிமுகவில் சேர விரும்பவில்லை. எம்ஜிஆர், கருணாநிதிக்கு அடுத்து ஸ்டாலின் தான் நிர்வாகிகளை மதித்து நடக்கும் மிகச் சிறந்த தலைவர் ஸ்டாலின்

நீதிமன்றம் சென்று கருணாநிதிக்கு இடம்பெற்ற துணிச்சலான முடிவை நான் வரவேற்கிறேன். அனைத்து தலைவர்களையும் அரவணைத்து செல்லக்கூடிய தலைவர் ஸ்டாலின் என தொடர் புகழாரம் சூடினார் தங்க தமிழ்ச்செல்வன்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, தேர்தலுக்கு முன்னதாகவே, அரவக்குறிச்சி எம்எல்ஏவான செந்தில் பாலாஜி அமமுக வில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்தார். இது குறித்து அப்போது கருத்து தெரிவித்த, தங்கத்தமிழ்செல்வன், "நான் செத்தாலும் சாவேனே தவிர திமுகவில் இணைய மாட்டேன் என தெரிவித்து இருந்தார். ஆனால் அதே தங்கத்தமிழ்ச்செல்வன் தான் தற்போது திமுகவில் இணைந்து ஸ்டாலினை ஆஹா ஓஹோ என புகழாரம் சூடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

click me!