’வாங்க தங்கம் வாங்க...’ தங்க தமிழ்ச்செல்வனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பகிரங்க அழைப்பு..!

Published : Jun 22, 2019, 12:30 PM ISTUpdated : Jun 22, 2019, 12:32 PM IST
’வாங்க தங்கம் வாங்க...’  தங்க தமிழ்ச்செல்வனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பகிரங்க அழைப்பு..!

சுருக்கம்

தங்க தமிழ்ச்செல்வன் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தால் வரவேற்போம் என மீள்வளத்துறை அமைச்சர் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தங்க தமிழ்ச்செல்வன் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தால் வரவேற்போம் என மீள்வளத்துறை அமைச்சர் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.  

சென்னை புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயிலில் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதையடுத்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், யாகம் நடத்தினால் மழை பொழியும் என்பது ஐதிகம். ஆகையால், தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கோயில்களில் யாகம் நடத்தப்படுகிறது. 

தமிழகர்கள் அனைவரும் வீட்டுக்கு ஒரு மரம் நடவேண்டும். அப்படி நட்டால் அது 100 பேருக்கு ஆக்சிஜன் தரும், இயற்கை வளங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நமது கடமை என்றார். மழைநீர் சேகரிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை பொதுமக்கள் தற்போது உணர்ந்துள்ளனர்.

 

தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம். சசிகலா மற்றும் அவரது குடும்பத்தாரை தவிர வேறு யார் அதிமுகவிற்கு வந்தாலும் வரவேற்போம். ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை கொள்கை அடிப்படையில் அதிமுக ஆதரவு அளிக்கிறது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

வங்கதேசத்தின் பாதுகாப்புக்கும், செழிப்புக்கும் இந்தியாவுக்கு நன்றியோடு இருங்கள்..! யூனுஷுக்கு ஷேக் ஹசீனா எச்சரிக்கை.!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!