
ஆர்.கே.நகரில் வெற்றியை தந்து தமிழ்நாட்டிற்கு மாபெரும் தலைவரை மக்கள் அடையாளம் காட்டிவிட்டார்கள் என தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது. இதுவரை நடந்த 11 சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில், 54102 வாக்குகள் பெற்று மதுசூதனனை விட சுமார் 27000 வாக்குகள் தினகரன் முன்னிலையில் உள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரனின் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன், ஆர்.கே.நகரில் தினகரனுக்கு வெற்றியை தந்த அத்தொகுதி மக்களுக்கு பாதம் தொட்டு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
துரோகிகளின் ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவேன் எனக்கூறி தேர்தலை சந்தித்த தினகரனிடம் கட்சியும் இரட்டை இலையும் வந்தாக வேண்டும். மத்திய அரசு, மாநில அரசு, காவல்துறை, தேர்தல் ஆணையம் போன்ற அனைத்து நெருக்கடிகளையும் மீறி தினகரன் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் தமிழ்நாட்டிற்கு தினகரன் என்ற மாபெரும் தலைவரை மக்கள் அடையாளம் காட்டியிருக்கிறார்கள் என தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.