அனைத்து மாநிலத்தையும் ஆள துடிக்கும் பாஜக..! ஆர்.கே.நகரில் ஆயிரம் ஓட்டாவது வாங்குமா..?

First Published Dec 24, 2017, 2:47 PM IST
Highlights
big setback for bjp in rk nagar by poll


அனைத்து மாநிலங்களையும் கைப்பற்ற துடிக்கும் பாஜக, ஆர்.கே.நகரில் ஆயிரம் ஓட்டாவது பெறுமா என்பதே பெரும் கேள்விக்குறியாகி உள்ளது.

2014 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் ஆட்சியமைத்த பாஜக, அதன்பிறகு நடந்த பெரும்பாலும் வெற்றியையே ருசித்து கொண்டிருக்கிறது. 

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூரில் தொடங்கி அண்மையில் குஜராத், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாஜக செலுத்தி வருகிறது. காங்கிரஸ் ஆட்சியிலிருந்து இமாச்சலிலும் காங்கிரஸை வீழ்த்தி பாஜக வெற்றி பெற்றது.

அனைத்து மாநிலங்களிலும் பாஜகவோ அல்லது தங்களின் கூட்டணியில் இருக்கும் பிராந்திய கட்சிகளோதான் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதிலும் தங்களின் ஆதிக்கம் அனைத்து மாநிலங்களிலும் இருக்க வேண்டும் என்பதிலும் பாஜக உறுதியாக உள்ளது. 

இப்படி, இந்தியா முழுதும் ஆதிக்கம் செலுத்திவரும் பாஜக, தமிழ்நாட்டில் காலூன்ற முடியாமல் தவித்து வருகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன், 10 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில், வெறும் 626 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.

இன்னும் 9 சுற்றுகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், ஆயிரம் வாக்குகளை எட்டுவாரா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் ஆட்சி செய்ய துடிக்கும், மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக, ஆர்.கே.நகரில் ஆயிரம் வாக்குகள் வாங்கினாலே பெரிய விஷயம் என்ற நிலையில்தான் தமிழகத்தில் அக்கட்சியின் நிலை உள்ளது.

பாஜக வேட்பாளரை விட நோட்டாவிற்கு அதிகமான வாக்குகள் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!