விரைவில் வெளிவரும் ஸ்லீப்பர் செல்கள்... எடப்பாடி அரசுக்கு அபாயம்!

First Published Dec 24, 2017, 2:18 PM IST
Highlights
Sleeper cells will be out against edappadi govt


துப்பாக்கி படத்திற்குப்பின் ஸ்லீப்பர் செல்கள் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியதும் அடிக்கடி நியாபகப்படுத்தியதும் ஆர்.கே.நகரில் சுயேட்சையாக களமிறங்கி வெற்றி முகத்தில் இருக்கும் தினகரன் தான். 

சுயேச்சை வேட்பாளராக சட்டசபைக்கு செல்லும் தினகரன் ஒன் மேன் ஆர்மியாக தனது ஆட்டத்தை ஆரம்பிப்பார் என்றே தோன்றுகிறது, அதுமட்டுமல்ல இரட்டை இலை இல்லாமல்    தினகரனுக்கு நல்ல சான்ஸ் கிடைத்து விட்டதாகவும் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் உள்ளனர். தினகரன் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டதில் இருந்து சொல்லி வரும் ஒரே வாசகம் எடப்பாடி அரசை வீட்டுக்கு அனுப்புவோம் என்பது தான்.

தனது ஆதரவு எம்எல்ஏக்களை வைத்து முதல்வர் பழனிசாமிககு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற முயற்சித்த நேரத்தில்18 எம்எல்ஏக்கள் கட்சியை மீறி செயல்பட்டதாக கொறடா அளித்த புகாரின் பேரில் அவர்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

சபாநாயகரின் இந்த அதிரடி உத்தரவால் இதனால் 18 எம்எல்ஏக்கள் தங்கள் அலுவலகத்தை காலி செய்து விட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தீர்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறார் இவர்களை நீக்கிய அந்த 18 தொகுதிகளும் காலியாக உள்ளன.ஆனால் இது சம்பந்தமாக  தேர்தல் ஆணையம் இன்னும் நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனால் மறைந்த ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில் மட்டும் பணப்பட்டுவாடாவால் ரத்ததான இடைத்தர்தலை திரும்பவும் மீண்டும் நடத்தியது இதில் அதிமுக சார்பில் மதுசூதனனும், திமுக வேட்பாளராக மருது கணேஷ் மற்றும் சுயேச்சை வேட்பாளராக தினகரனும் போட்டியிட்டனர். கடந்த இரு தினங்களுக்கு முன் நடந்த இந்தி வாக்கு பதிவு நடந்தது. இதனையடுத்து இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. முதல் சுற்றிலிருந்து தொடர்ந்து ம் உன்னிலையில் இருக்கும் தினகரனுக்கு இதுவரை 53.1% வாக்கு பெற்றுள்ளார்.  தொடர்ந்து 8 சுற்று முடிவில் தினகரன் முன்னிலையில் இருக்கிறார். இதே நிலை கடைசி சுற்று வரை வந்த தினகரன் சட்டமன்ற உறுப்பினராகிவிடுவார்.

இந்நிலையில், எப்போதுமே தினகரனின் பேமஸ் வசனமான அந்த ஸ்லீப்பர் செல்கள் என்ற வார்த்தை உண்மையாகவே இருக்கிறதா அப்படி இருந்தால் அவர்கள் வெளியே வருவார்களா அப்படி வெளிவந்தால் முதல்வர் பழனிசாமி அரசுக்கு அபாயம் ஏற்பட வாய்ப்பு காத்திருக்கிறது. 

அதுமட்டுமல்ல காலையிலிருந்து வாக்கு எண்ணிக்கை  நிலவரத்தை பார்த்த தினகரன் முதல்வர் பழனிசாமியின் ஆட்சி 3 மாதத்தில் களையும் என்று  மதுரை விமான நிலையத்தில் பேட்டியளித்தார். 18 எம்எல்ஏக்கள் விவகாரத்திலும் தினகரனுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துவிட்டால் 18 எம்எல்ஏக்கள் + தினகரன் + வெளியில் வரும் ஸ்லீப்பர் செல்கள் இணைந்து முதல்வர் பழனிசாமி ஆட்சிக்கு பங்கம் விளைவிக்க அதிகம் வாய்ப்பிருக்கிறதாகவே தெரிகிறது.

click me!