’தங்கத்தமிழுக்கு கட்டம் சரியில்ல நம்ம கூட வெளாடுறதே அவருக்கு வேலையா போச்சு.’ என்று பன்னீர் செல்வத்தின் ஆதரவுப்புள்ளிகள் புகைந்து கொண்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. காரணம், அந்தளவுக்கு பன்னீர் குறித்தான பல விஷயங்களில் எடக்கு மடக்காகவும், கோக்கு மாக்காவும், கடுப்பேத்தும் வகையிலும் கமெண்ட் அடிப்பதே தமிழுக்கு வேலையாகிப் போயிருக்கிறது. ஓ.பன்னீர்செல்வத்தை வளர்த்து வார்த்தெடுத்த அதே தேனி மாவட்டம் தான் தங்கத்தமிழ் செல்வனையும் அ.தி.மு.க.வில் உருவாக்கியது. பன்னீரும், தமிழும் துவக்க காலத்தில் ‘எப்பே நீ மெட்ராஸுக்கு போறப்ப சொல்லு. நானும் வந்துடுறேம்.’ என்று ஒட்டி உறவாடுமளவுக்கு நெருக்கந்தேம். ஆனால் தினகரன் ஆசியால் மளமளவென வளர்ந்த பன்னீர்செல்வம் தன் மகனுக்காக தன்னை பலிகடாவாக்குகிறார் என என்று தங்கத்தமிழ் நினைத்தாரோ அன்று துவங்கியது வாய்க்கா தகராறு. அன்றிலிருந்து இன்று வரை இரண்டு பேருக்கும் ஏழாம்பொருத்தம்தான். தங்க தமிழால் ஜீரணிக்க முடியவில்லை என்றாலும் கூட ஜெயலலிதாவின் நிழலில் அவர் பொதுப்பணித்துறை மந்திரி, முதலமைச்சர் என்கிற லெவலுக்கு வளர்ந்ததால் எதுவுமே செய்ய முடியவில்லை. ஓப்பனாய் விமர்சனம் கூட பண்ண முடியவில்லை. இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் சூழல் தலைகீழானது. சசிகலாவின் தரப்புக்கு எதிரான நிலைப்பாட்டை பன்னீர் எடுத்த நொடியில் அவருக்கு எதிராக விமர்சன பட்டாசை பற்ற வைக்க துவங்கினார் தங்கதமிழ்ச்செல்வன் அது தாறுமாறாக வெடித்துக் கொண்டிருக்கிறது இன்று வரை. ’தர்ம யுத்தம்’ எனும் பெயரில் பன்னீர் புது பாலிடிக்ஸ் செய்தபோது அதை வறுத்தெடுத்த தங்கம், அவர் எடப்பாடியுடன் மீண்டும் இணைந்தபோது ‘பதவி ஆதாயத்துக்காக தர்ம யுத்த ரதத்தை பஞ்சராக்கி படுக்கையில் போட்ட பன்னீர்செல்வம்.’ என்று போட்டுப் பிளந்தார்.இந்நிலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தை ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைக்கப்போவதையும் விட்டு வைக்காமல் தன் பாணியில் நக்கலாக தாளித்திருக்கிறார் இப்படி...“மிக சிறந்த நடிகரான சிவாஜியின் மணி மண்டபத்தை மற்றொரு சிறந்த நடிகர் ஓ.பன்னீர்செல்வம் திறக்கப்போகிறார்.” - தங்க தமிழினின் இந்த நய்யாண்டித்தனத்தை பன்னீர் ஆதரவாளர்கள் மிக கடுப்பாக எதிர்த்திருக்கிறார்கள். பதிலுக்கு கூடிய விரைவில் தினகரன் பற்றி அவர்களிடமிருந்து ஏதாச்சும் உருமல், பொருமல் ஸ்டேட்மெண்டுகள் வந்துவிழக்கூடும்.