லீக் ஆகிருந்தா ரூ.2000 கொடுத்திருக்கமாட்டோம்.. எங்களுக்கு கிறுக்கா பிடிச்சிருக்கு.. எடப்பாடியை மடக்கிய தங்கம்

By Asianet TamilFirst Published Mar 17, 2021, 9:24 PM IST
Highlights

குடும்பத்துக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் திட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிந்தனையில் உதித்த மிகப் பெரிய திட்டம் என்று போடி தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
 

தேனி மாவட்டம் போடி தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் களமிறங்கியுள்ளார். அவரை எதிர்த்து திமுக சார்பில் தங்க தமிழ்செல்வன் போட்டியிடுகிறார். தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள தங்க தமிழ்செல்வன் தேர்தல் பிரசாரத்தில் பேசுகையில், “காஸ் சிலிண்டர் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தக்கோரியும் விலையை குறைக்கக் கோரியும் 8 தடவை போராட்டம் நடத்திவிட்டோம். சிலிண்டர் விலையை ரூ. 50 வரை குறைக்கச் சொல்லி கேட்டோம். அதையே உங்களால் குறைக்க முடியவில்லை. ஆபால், தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு 6 சிலிண்டரை இலவசமாக தருகிறோம் என்று சொன்னால் மக்கள் எப்படி நம்புவார்கள்?


குடும்பத்தலைவிக்கு 1,500 ரூபாய் மானியம் கொடுப்பதை நாங்க எழுதி வைத்திருந்தோம். அது லீக் ஆகிவிட்டது. அதனால், திமுக முந்திவிட்டது என்று எடப்பாடி பழனிச்சாமியும் அதிமுகவினரும் பொய்யான தகவலை கூறிவருகின்றனர். எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் நான் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். நீங்க எழுதி வைத்தது உண்மையாக இருந்தால். அதை நாங்கள் பார்த்திருந்தால், குடும்பத் தலைவிக்கு 1,500 ரூபாய் என்பதை 2,000 ரூபாய் என்றுதானே சொல்லியிருப்போம். நாங்க எதுக்கு 1,000 ரூபாய்னு சொல்லப்போறோம். எங்களுக்கு என்ன கிறுக்கா பிடிச்சிருக்கு. நாங்க வெற்றி பெறத்தானே பார்ப்போம். அதனால், இதில் லீக் எதுவும் கிடையாது.


இது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிந்தனையில் உதித்த மிகப் பெரிய திட்டம். இது எந்த முதல்வரும் செய்யாத சாதனை. கொரோனா காரணமாக மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் மனநிலையைப் புரிந்துதான் முதல்வரானதும் தகப்பன் ஸ்தானத்தில் அந்தக் குடும்பங்களுக்கு ரூ. 1,000 கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மு.க.ஸ்டாலினுக்கு வந்துள்ளது. அதைத்தான் தாய்மார்கள் நம்புகிறார்கள். அதனால், எங்கள் தேர்தல் அறிக்கையின் ஹைலைட்” என்று தங்க  தமிழ்செல்வன் தெரிவித்தார்.
 

click me!