தேனியை உலுக்கியெடுத்த தங்க தமிழ் செல்வன் ! அதிர்ந்து போன அதிமுக !!

By Selvanayagam PFirst Published Mar 25, 2019, 8:46 AM IST
Highlights

தேனி மக்களவைத் தொகுதியில் அமமுகவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தங்கதமிழ் செல்வன் நேற்று தேனி வந்தபோது கணவாய் மலைப்பகுதியில் இருந்து தொண்டர்கன் அவரை பிரமாண்டமாக ஊர்வலம் நடத்தி வரவேற்பு அளித்த நிகழ்வால் அதிமுகவினர் மிரண்டு போயுள்ளனர்.

அதிமுக உடைந்தபோது டி.டி.வி.தினகரனுக்கு  பெரும் ஆதரவு தெரிவித்தவர் ஆண்டிபட்டி தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த தங்கதமிழ் செல்வன். ஆனால் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் ஆளுநரை சந்தித்து மனு அளித்தால், அந்த 18 பேரையும் சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த தகுதி நீக்கத்தை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது.

இந்நிலையில் தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு வரும் 18 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் அமமுக சார்பில் பெரும்பாலும் பழைய எம்எல்ஏக்களே மீண்டும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதியில்,  தகுதி நீக்கம் செய்யப்பட்ட தங்கதமிழ் செல்வன் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை  தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளராக டி.டி.வி.தினகரன் அறிவித்தார்.

அதிமுக சார்பில் ஓபிஎஸ் மகன் ரவீந்திநாத் நிறுத்தப்பட்டுள்ளதால் அவருக்கு டஃப் கொடுக்கும் வகையில் தினகரன் இந்த அதிர்ச்சியை அளித்துள்ளார்.
இந்நிலையில் தங்கதமிழ் செல்வன் தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் முதன் முறையாக அவர் தேனி வந்தார். அவருக்கு அமமுக தொண்டர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.

தேனி செல்லும் வழியில் உள்ள கணவாய் மலைப்பகுதியில் திரண்ட அமமுக தொண்டர்கள் தங்கதமிழ் செல்வனுக்கு ஆச்சரியப்படுத்தும் வகையில் வரவேற்பு அளித்தனர்.

தேனி நகருக்கு நுழைந்த தங்க தமிழ் செல்வனுக்கு தொண்டர்களும்,  பொது மக்களும் பல்லாயிரக் கணக்கில் திரண்டு வரவேற்பு அளித்தனர். தங்கதமிழ் செல்வனுக்கு ஆதரவாக கட்டுக்கடங்காமல் திரண்ட கூட்டத்தைப் பார்த்து அதிமுகவினர் தற்போது மிரண்டு போயுள்ளனர்.

click me!